❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
களுக்கும் உடம்பில் ஓர் அதிர்ச்சி உண்டாகின்றது. அதனோடு உள்ளே நெஞ்சந் திடுக்கிடுகின்றது. உடம்புழைப்பு உள்ளவர் களுக்காயின் இவ்வதிர்ச்சி தீங்குதராது; ஏனெனில்,அவர் களுடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள எல்லா உறுப்புகளும் நன்றாய் இறுகி வலுப்பட்டு நிற்குமாகலின், அறிவுமுயற்சி யுடையவர்களுக்கோ எல்லா உறுப்புகளும் மென்மை யுடையன வாயிருக்குமாதலால்,அவ்வதிர்க்சி அவர்களுக்குப் பெரிதுந் தீங்கு பயப்பதாகும்; ஆதலால்,அவர்கள் வெதுவெதுப்பான, நீரில் ஆடுதலே நலந் தருவதாகும். இந்த ஏதுவால், அறிவுமுயற்சி யுடையவர்கள் விடியற் காலையிற் குளிர்ந்த நீர்நிலைகளில் தலைமுழுகுதல் விரும்பற்பால தன்று; வெயில் வெப்பம் ஏறிய நடுப்பகலில் அவர்கள் அவற்றில் முழுகுவராயின் அவர்க்கேதுந் தீங்கு வராது. உடம்புழைப் புள்ளவர்களுங்கூட ஒருகிழமைக் கொரு கால் வெந்நீரிற் குளித்து வருதல்வேண்டும். அறிவுமுயற்சி யுடையவர்கள் ஒரு திங்களுக்கு இருமுறையேனும் நண்பகலில் நீர்நிலைகளில் முழுகி அந்நீரின் குளிர்ச்சி தமதுடம்பிற்படும் படி செய்துவரல் வேண்டும்.எந்நேரமுங் குளிர்ந்த நீரிலேயே முழுகுதலும், எக்காலும் வெந்நீரிலேயே குளித்தலும் விரும்பற் பாலன அல்ல. இடையிடையே இம்முறை மாறி நீராடுதலும் உடம்பைப் பாதுகாத்தற்கு இன்றியமையாது வேண்டப் படுவதேயாம்.
இனி,நோயாளிகளோ தமதுடம்பு செவ்வையான நிலைக்கு வருங்காறும் வெந்நீரிலன்றி வேறு நீரில் முழுகுதல் ஆகாது.ஆனால் இந்த முறை வெப்புக் கொப்புளமும் அம்மை நோயுங் கொண்டவர்களுக்கு இசையாது; இந்நோயாளி களின் உடம்பு முழுதும் அழன்றுபோயிருத்தலால்,இவர்கள் குளிர்ந்த நீரில் அமிழ்ந்தியிருந்து ஒரு நாழிகை வரையில் முழுகிவருதல் நலந்தருவதேயாகும். அம்மைநோய் கொண்டவர்கள்,ஒரு பெரிய துத்தநாகத்தகட்டுத் தொட்டியிற் குளிர்ந்த நீரை முக்காற் பங்கு நிரப்பி,அதிற் கால்கைகளை நனையாமலும் வயிற்றிற் கொப்பூழுக்குமேல் தண்ணீர் படாமலும் நாளொன்றுக்குக் காலை நண்பகல் மாலை என்னும் முப்பொழுதும் உட்கார்ந்து வயிற்றினடியைக் குளிரச் செய்து வருவார்களாயின்,அக்கொடுநோய் இரண்டு மூன்று நாட்களில் தீரப்பெற்று நலம் பெறுவார்கள்; இங்ஙனஞ் செய்து