❖ மறைமலையம் 1 ❖ |
வருபவர்களுக்கு அம்மைக் கொப்புளங்கள் உள் அழுந்தி மறைந்துபோகும். அம்மைத் தழும்புகளுஞ் சிறிதுங் காணப்பட மாட்டா. உள் அழற்சி மிக உடைய இந்நோயாளிகளைத் தவிர, மற்ற வகையான நோய்கொண்ட பிறர்க்கு வெந்நீரும் வெதுவெதுப்பான நீருமே பெரிதும் நலம் பயப்பனவாகும் என்று தெளிக.வெந்நீர்ப்பட்ட மட்டிலே இந்நோயாளிகளின் உடம்பி லோடும் இரத்தங் கொதிப் பெடுத்துத் தன்கண் உள்ள நச்சு நீரையெல்லாம் வியர்வைத் துளைகளின் வழியே புறந்தள்ளும்;அவர்கள் உடம்பின் மேலுள்ள வியர்வைத் துளைகளில் அடைபட்டிருந்த பொல்லா அழுக்குகளுங் கழுவப்பட்டுப் போக, அத்துளைகளுஞ் சூட்டால் வாய் அகன்று, மேல்வரும் அழுக்குகளுந் தடைபடாது தாராளமாய் வெளிவர இடங்கொடுக்கும்; ஆனால்,இங்கே கருத்திற் பதிக்க வேண்டுவது ஒன்றுண்டு.வெந்நீரிற் குளிப்பவர்களுக்கு வியர்வைப் புழைகள் அகன்றிருத்தலானும்,உள்ளோடும் இரத்தங் கொதிப்பெடுத்துத் தோல்மேல் மிகப்பரவுதலானும் அப்போது குளிர்ந்த காற்று அவர்கள்மேற் படுமாயின் அவர்களிரத்தங் குளிர்ந்து தடிப்பாய்ப் போக உடனே காய்ச்சல் உண்டாகும்; ஆகையால் வெந்நீரில் முழுகினவர் மேலே குளிர் காற்றுப்படும்படி உடம்பைத் திறப்பாக விட்டிருத்தல் ஆகாது; உடம்பைப் போர்த்துக் கொள்வ தோடு சிலநாழிகை நேரம் வரையிற் குளிர்ங்காற்று, மேலே படாமலும் இருத்தல் வேண்டும்.
இனி,நீராடுங்கால் உணவில்லாமல் வெறு வயிற்றோடு இருத்தல்நன்று. ஏனென்றால், ழுழுகும்போது உடம்பெங்கும் இரத்தம் பரவியிருத்தல் வேண்டும்.அப்படியிருந்தாற்றான்,குளிக்கும் போது உடம்பிற் சோரும் ஈரத்தை இரத்தமானது வெளியே தள்ளிவிடும். சில இடங்களில் இரத்தங் குறைவு பட்டு நிற்குமானால், உள்ளே ஈரஞ்சுவறி நீர்க் கொள்ளும்; அதனால் இருமலுஞ் சளியுங் காய்ச்சலும் உண்டாகும் தீனிப்பையில் உணவு இடப் பட்டால் அதனைச் செரிக்கச் செய்யும் பொருட்டு மூளையிலும் உடம்பின் மற்ற இடங்களிலும் உள்ள இரத்தத்தில் ஒருபெரும்பாகந் தீனிப் பையிற் செல்லா நிற்கும்; இதனாலேதான் உண்டபின்பு களைப்பு உண்டாகின்றது.உணவெடுத்தவர் களுக்குத் தலையிலும் உடம்பின் மற்றைப்