பக்கம்:மறைமலையம் 1.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
234

❖ மறைமலையம் 1 ❖

வெளியே சென்று உலவினாலும் உணவுண்டு இளைப்பாறி இன்புற்றிருத்தற்குத் தம்வீடுதேடி வந்து தம் பெண் மக்களின் உதவியை ஆண்பாலர் எல்லாரும் இன்றியமையாது வேண்டி நிற்றலாலும், வீட்டிலுள்ள பெண்மக்களும் அவர் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும் நோய் கொண்டு அடிக்கடி வருந்து வராயின், ஆண்பாலார் தாமும் அதனால் மிகவுந் துன்புற்று நைந்துபோவர். ஆதலாலுந் தமது நலத்தின் பொருட்டாக வேனும் ஆண் மக்கள் பெண்மக்கள் நலத்தைக் கருத்திற் காண்டு வீடுகளைச் செவ்வையாகக் கட்டுதல் வேண்டும். வீட்டின் நடுவில் மேற்கூரையைத் திறப்பாக வைத்து, வீட்டின் புறத்தே சுற்றிலுமுள்ள சுவர்களிற் சாளரங்கள் பலப்பல அமைத்துக் கட்டுஞ் சோழ நாட்டார் வழக்கத்தைப் பின்பற்றி மற்ற நாட்டவர்களும் இல்லங்கள் வகுப்பராயின் அவர் மிக்க நலம் பெறுவர்; காற்றும் ஒளியும் வெயிலும் அவர் வீடுகளினுள்ளே பரவி நிலத்தைத் துப்புரவாக வைப்பதுடன் உள்நிறையும் நச்சுக் காற்றையும் உடனுக்குடன் அகற்றி எல்லார்க்கும் மிக்க நன்மையைத் தரும்.

இனி, வீட்டினுள்ளே உணவு சமைக்கும் அறை, உணவருந்தும் அறை, படுக்கை அறை, சாக்கடை முதலிய இடங்களை நிரம்பவுங் கருத்தாய் அடுத்தடுத்துத் துப்புரவு செய்து, பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் விளக்கி வைக்க வேண்டும். இவ்விடங்களில் தீய நாற்றமேனுங் கழிக்கப்பட் குப்பை கூளங்கள் கும்பிகள் அழுக்குகளேனுஞ் சிறிதும் இருக்கவிடல் ஆகாது. இப்பகுதிகளின் அடிநிலங்களில் ஓதம் இல்லாமலுஞ் சுற்றுச் சுவர்களில் மூக்குச்சளி கையழுக்கு எண்ணெய்கடு முதலியன படாமலும் பார்த்துவரல் வேண்டும். வீட்டிற் பார்வையான இடங்களைமட்டும் மிகச் செவ்வையாகத் துப்புரவு செய்து வைப்பதும், பார்வைக்கு மறைவான சமையலறை படுக்கையறை சாக்கடை முதலிய வற்றைப் பாண்டல் ஆக்கிப் ஆக்கிப் பாராமுகமாய் விட்டு இருப்பதும் நம்மவர்க்கும் பெரும்பான்மை வழக்கமாயிருக்கின்றன. இது நிரம்ப அருவருக்கத் தக்கதாயிருப்ப தோடு, இங்ஙனம் பாராமுகஞ் செய்பவர்களையும் அஃது ஓயாது துன்புறுத்தி வருதலால், வீட்டினுள்ளும் வெளியும் ஒருங்கே துப்புரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/267&oldid=1584001" இலிருந்து மீள்விக்கப்பட்டது