பக்கம்:மறைமலையம் 1.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
242

❖ மறைமலையம் 1 ❖

வரப் பெற்றார்களில்லையே! இத்துணை இடர்களும் எங்கிருந்து வரலாயினவென்று கருதிப் பார்ப்பவர் எவரேனும் உளரா?

“உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை” (குறள் 1036)

என்னுந் தெய்வத் திருவள்ளுவர் மெய்யுரையைச் சிறிதேனும் எண்ணிப் பார்ப்பவர் எங்கேனும் உளரா? எங்கே திரும்பிப் பார்த்தாலுங், கைத்தொழிலைப் பெருகச் செய்ய வேண்டும் என்று உரைப்பார் தொகையும், அயல் நாட்டினின்று செய்து கொணர்ந்த பண்டங்களைச் சிறிதும் வாங்கலாகாதென்று கிளர்ச்சியொடு கூறுவார் கூட்டமும், உயர்ந்த அலுவல்களில் அமர்ந்து பெரும் பொருள் தொகுக்க முயல்வார் தொகுதியும், பெரும் பொருள் பெற்றும் அதனை உழவிற்குங் கல்விக்கும் பயன்படுத்தாமற் கூத்துக்குங் குடிக்கும் போலிப் பட்டப் பேற்றிற்கும் வீண்பெருமைக்கும் வேசிக்கும் அழிப்பார் குழாமும், நிலைபெற்ற ஆட்சியுடைய அரசினரோடு இகலித் தாந்தாம் அறிந்தவாறு பல முறைகளைப் போலி மனவெழுச்சி மிக மன்றங்களிற் பேசிக் கல்வி கற்கும் இளைஞருள்ளத்தைத் திரிப்பார் குழுவும், உலக வழக்கத்திற்குப் பயன்படாத வடமொழி முதலான சொற் பயிற்சியை உயர்த்துப் பேசி உலக வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்பட்டுவருஞ் செந்தமிழ்ப் பயிற்சியை இழித்துரைத்து உண்மையில் இல்லாத குல வேற்றுமையை உண்டுபோல் மாயங்காட்டி ஒரு வகுப்பினரே உயர்ந்தோரென்று வாய்ப்பறை யறையும் வல்லாளர் திரளும் மலிந்து வருகின்றனவே! இவ்விந்திய நாட்டைத் தவிர உலகத்தில் உள்ள மற்ற நாட்டவர்களெல்லாருங் கல்வியிலும் ஒற்றுமையிலும் பொதுநல முயற்சியிலும் நாளுக்கு நாள் மேம்பட்டு உழவையுங் கைத்தொழிலையுங் கொண்டு விற்றலையும் பெருகச் செய்து இன்புற்று வாழ்வதை நேரே கண்டும், நம்மிந்தியர்கள் இன்னும் நல்லுணர்ச்சி வரப் பெறாமலுங் கல்வி கல்லாமலும் உழவு தொழிலைப் பெருக்காமலும் ஒருவரோடொருவர் அன்போடள வளாவி ஒற்றுமையாய் இராமலும் ஒவ்வொரு வருந் தம்மைத் தாமே உயர்ந்தவராகக் கருதி இறுமாந்து ஒழுகித் தம்மையுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/275&oldid=1584129" இலிருந்து மீள்விக்கப்பட்டது