பக்கம்:மறைமலையம் 1.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
248

❖ மறைமலையம் 1 ❖

நாகரிகவளர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டிய பண்டங்களை நாமே செய்து முடித்தற்குக் கைத்தொழில் முயற்சி கட்டாயமாய் வேண்டப்படுவதே யாயினும், அதனை உழவு தொழிலுக்கு அடுத்தபடியில் வைத்து, அதனால் உழவுக்கு எவ்வகையான டையூறும் உண்டாகாதவாறாய், அதனைப் பாதுகாத்து நடப்பித்தல் வேண்டும் என்பதே நமது கருத்தாவதாம். மேலும், கைத்தொழில் கொண்டுவிற்றல் முதலான மற்றை முயற்சிகளைச் செய்பவர்களுங்கூட உழுவுதொழிலைப் பெரிதாய் எண்ணி அதனைத் தாமும் நடத்துதற்கான வழிகளெல்லாந் திறப்பித்தல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/281&oldid=1584143" இலிருந்து மீள்விக்கப்பட்டது