❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
மாணவரின் மூளை தெளிவுஞ் சுருசுருப்பும் வாய்ந்து மறதியில்லாமற் பாடங்களை எளிதிற் பயின்று அவர்கள் கல்வியறிவு றேர்ச்சிபெற்று விளங்கத் துணை புரிதலையும், அங்ஙனம் உறங்கி அயர்வு தீர்த்துக் கொள்ளாத இளைஞரின் மூளை தெளிவின்றி மங்கிச் சோம்பலுற்றுக் கற்ற பாடங்களையும் மறந்து, அவர்கள் கல்வியில் வல்லராக வொட்டாமற் றடை செய்தலும் இனிது விளக்கலாயின வென்க.
எனவே, உறக்கமானது மூளையுழைப் புள்ளவர்கட்கு வேண்டும் அளவிலுங் காலத்திலுஞ் சிறிதுங் குறைய விடாமற் பார்த்து நடப்பவர்கட்கே வாழ்நாள் நீளும் என்பதும், அதிற் கருத்தில்லாமையால் துயின்று அயர்வு தீர்த்துக் கொள்ள வேண்டும் இராக்காலங்களிலும் பிற்பகற் பொழுதிலும் வேறு பல முயற்சிகளைச் செய்வார்க்கோ வாழ்நாள் தேய்ந்து போமென்பதும் நன்கு பெறப்படுதல் காண்க.
மக்கள் அல்லாத விலங்குகள், தம்மிற் பகையான விலங்குகட்கு அஞ்சி இரவிலும் பகலிலும் நன்கு அயர்ந் துறங்காமல், அரைத் தூக்கத்திற் காலங்கழித்த லாலன்றோ, அவைகளிற் பெரும்பாலான நீண்டவாழ்நாள் இல்லாதன வாய்ச் சில்லாண்டுகளில் மாண்டு போகின்றன. தீனி குறைந்தவிடத்துஞ் சிலநாள் உயிரோடிருக்கும் விலங்குகள் தூக்கங் குறைந்தவிடத்து விரைந்து உயிர்மாளுதலும் ஆராய்ந்து காணப்பட்டது. இரைதராமல் வைக்கப்பட்ட வழி ஒரு திங்கள் உயிரோடிருந்த பத்து நாய்க்குட்டிகள், ஒரு கிழமை உறங்காமல் வைக்கப்பட்ட போது ஒரு கிழமைக்குள் ஒன்றன்பின் ஒன்றாய் இறந்துபோயின. அவற்றுள் ஒன்று தொண்ணூற்றிரண்டு மணிநேரந் தூங்கால் வைக்கப்பட்டவுடன் உயிர்விடலாயிற்று. உடம்புழைப்பு ஒன்றே யுடைய விலங்குகளே தூக்கக் குறைவினால் இங்ஙனம் வாழ்நாள் அஃகி மாண்டு போகின்றன வென்றால், உடம்புழைப்பொடு மூளையுழைப்பும் ஒருங்கு வாய்ந்த மக்கள் துயில் குறைந்தால் நீடுவாழ்தல் இயலுமோ? ஆதலால், மனமுயற்சி யுடல் முயற்சி யிரண்டும் உடைய மக்கள் தமது துயிலின் அளவையுங் காலத்தையுங் குறையாமற்