❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖ |
ஒன்றைச் செய்ய வேண்டும் என்று விருப்பத்துடன் இருப்பவரை அவர் அச் செயலைச் செய்யாதவாறு தடுத்தும், படிக்க விரும்பும்போது படிக்கவிடாது உரையாடலில் ஈடுபடுத்தியும், தனிமையை நாடி இருப்பவரை அவருடைய தனிமையைக் கலைத்துத் தாம் விரும்புவதைச் செய்யும்படி வற்புறுத்தியும் அவர்கள் பிறரைத் தளர்வடையச் செய்கின்றனர்.
இங்ஙனமே சிலர் தாமே தம்மைத் தளர்வடையச் செய்வது முண்டென்க. வேண்டாத பலவற்றை மீண்டும் மீண்டும் எண்ணுவதினானும் மிக்க சினத்தினானுந் துன்பத்தினானும் சிலர் தளர்வடைகின்றனர்.
இனிக் காலத்தின் தட்பவெப்ப நிலையும் மக்களைத் தளர்வடையச் செய்கின்றது என்பதை விளக்குவாம்; கீழை நாட்டில் ஓர் அலுவலகத்தின்கண் பணியாற்றியவர்கள் வெப்பம் குறைவாகவுள்ள நாட்களை காட்டிலும் வெப்பம் மிகுதியாகவுள்ள நாட்களில் மிகுதியான பிழைகள் செய்தனர் என்பதை அறிஞர்கள் ஆராய்ந்து கண்டனர். இதனால் வெப்பம் மிகுந்த சூழ்நிலை மூளையைத் தளர்வடையச் செய்கின்றது என்பதறிக.
இவ்வாறே சூழ்நிலையும் உடலுறுப்புகளைத் தளர்வடையச் செய்கின்றன. நீண்டநேரம் உற்றுநோக்கி நுண்ணிய தொழிலைச் செய்வதினாலும் படிப்பதினாலும் கண்கள் தளர்வடைகின்றன என்றும், மங்கிய மின்னொளி சிலருடைய மூளையை சோர்வடையச் செய்கின்றது சய்கின்றது என்றும், இவ்வுண்மையை மேலை நாட்டு இஞ்ஞான்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஓசை நிறைந்த சூழ் நிலையும் மூளையைத் தளர்வடையச் செய்கின்றது என்பது அறிஞரது முடிவு.
மேலே கூறியவாறு பல காரணங்களால் உண்டாகுஞ் சோர்வை நீக்கும் பொருட்டுத் துயில்கொள்ளும்போது எவ்வாறு உறங்கினால் நாமுற்ற தளர்வனைத்தும் நீங்கும் என்பதை யாம் விளக்கிக் காட்டுவாம் :
ஒருவர் இரவில் நாள்தொறும் எட்டுமணிநேரம் உறங்கவேண்டும். சிலர் ஆறுமணிநேரம் தூங்குகின்றனர். பத்து