பக்கம்:மறைமலையம் 1.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை - 1 ❖
257



இனி, யாம் படுப்பதற்குச் சிறப்புறு வகையில் படுக்கை எவ்வாறு அமையவேண்டும் என்பதனை உற்றுநோக்குவாம். ஒருவன் படுக்கும் படுக்கை இருவர் உறங்குவதற்குரிய அகலம் உடையதாயிருத்தல் வேண்டும். படுக்கை அகலமாயில்லாது குறுகியதாயிருப்பின் உறங்குபவன் எப்பொழுதும் உருண்டால் கீழே விழுந்துவிட நேரும் என்ற அச்சத்துடனேயே உறங்குதலான் உடலை அசையாது ஆடாது உறங்குவான். இவ்வாறு செய்யின் உடல் ஒரே நிலையிலிருப்பதால் உடலில் ஏற்பட்ட சோர்வு நீங்காது துன்புறுவன், அதனாற் படுக்கைகளை அகலமாய் அமைத்துக்கொள்ளுதல் வேண்டும். படுக்கை உறங்குபவனின் உடலை உறுத்தாதவாறு மெல்லிய தன்மையை உடைத்தாயிருத்தல் நலம்.

இங்ஙனமே மேலே கூறியவாறு பல வாய்ப்புகளுடன் நன்றாக உறங்கி விழிப்பவன் மீண்டும் மறுநாள் தன் கடமைகளைச் செய்யும் புதிய ஆற்றலையும் உணர்வையும் பெறுவன்.


மக்கள் நூாறாண்டு உயிர் வாழ்க்கை
முதல் பாகம்
- முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/290&oldid=1597807" இலிருந்து மீள்விக்கப்பட்டது