பக்கம்:மறைமலையம் 1.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

259



திரு.வி.க.


“1910 ஆம் ஆண்டில் சித்தாதிரிப் பேட்டையில் (சென்னையின் ஒரு பகுதி) வேதாசலரின் சொல்லமிழ்தைப் பருகுந் தவமுடையனானேன். அவரது தமிழுடலும், தமிழுரையும், தமிழ்க்குரலும், தமிழ்ப் பொருள் என்னை அவர் தம் தோழனாக்கின; தொண்டாக்கின. முன்னாளில் மறைமலையடிகள் அடிக்கடி இராயப்பேட்டை (சென்னையின் பகுதி, திரு.வி.க. வாழ்விடம்) குகானந்த நிலையத்தில் (முருகன் சபை) தங்குவர். அடிகட்கு எல்லாப் பணிகளையும் செய்ய யானே முந்துவன். மற்றவரும் போட்டியிடுவர்.சங்க நூல்களில் எனக்குற்ற ஐயங்களை அடிகளிடம் வெளியிடுவேன். அடிகள் படுக்கையில் கிடந்து காண்டே ஐயங்களைக் களைவர். வேறுபல பேச்சுக்களும் எங்களிடை நிகழும்... தமிழ்வானத்தில் ஒரு தூய திங்களென அடிகள் திகழ்ந்ததைக் கண்டேன்.... “செய்வன திருந்தச் செய்” என்னும் முதுமொழிக்கு அடிகளின் வாழ்க்கை ஓரிலக்கியம். மறைமலையடிகள் யார்?.. அன்றைய நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரனாரும் ஒருருக் கொண்டு வேதாசலனராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யான் அவரைச் சொல்லாலும் எழுத்தாலும் போற்றுவதுண்டு. வேதாசலனார் தமிழ் செந்தமிழ் - சங்கத் தமிழ் என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவுஞ் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ்நாட்டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன். அவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்; வடமொழியுந் தெரிந்தவர்... யான் கல்லூரி விடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/292&oldid=1584162" இலிருந்து மீள்விக்கப்பட்டது