262
பயன் வழங்கும் புலமை
மறைமலையடிகளாரின் மாண்பினை - எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் வியக்கத்தக்க மாண்பினை அவரோடு நெருங்கிப் பழகிய பலரும் எடுத்துரைத்திருக்கிறார்கள். நான் அவரோடு அதிகம் நெருங்கிப் பழகியவன் அல்லன்; அவரோடு எங்களுக்கு ஏற்பட்ட தொடர்பெல்லாம், இந்த நாட்டில் முதலில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதுதான்.
மறைமலையடிகளாரது புலமை, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட எங்களுக்கெல்லாம் பெரும் அரணாக அமைந்திருந்தது. இந்தி தமிழகத்திற்குத் தேவைதானா? அது தமிழகத்திற்குப் பொதுமொழியாகத்தான் வேண்டுமா? அப்படிப் பொது மொழியானால் தமிழுக்கு ஏற்படக்கூடிய தீமைகள் என்னென்ன என்பதை எல்லாம் மறைமலையடிகளார் ஏடுகளின் வாயிலாக எடுத்துக் காட்டி வந்தார்கள்.
இதைப்போல, அவர் மேற்கொண்டிருந்த பல்வேறு முயற்சிகள் இன்று காலத்தால் கனிந்து வருகின்றன.
மறைமலையடிகளது திருப்பெயர் - பெற்றோரிட்ட பெயர் வேதாசலம் என்பதாகும். அதனை அவர் மறைமலையடிகள் என மாற்றிக்கொண்டபோது பலருக்கு ஐயப்பாடு. சிலர், இது என்ன புதியதோர் புலி என்று கேட்டனர்.
ஆனால், மறைமலையடிகளோ, தமிழனுக்கு எனத் தனிப் பண்பு உண்டு; மொழி உண்டு என்பதை நிலைநாட்டுவதில் மிக அக்கறை காட்டினார். இந்தப் பண்பும் மொழியும் காப்பாற்றப்படாவிடின் நாளாவட்டத்தில் தமிழர்கள் இந்தப் பண்பையும் மொழியையும் மறந்து தங்களுக்கென உள்ள சீரிய தன்மையை இழந்துவிடுவர். உலகில் இன்றுள்ள வாழ்விழந்த