இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
❖ மறைமலையம் 1 ❖ |
வற்றையும் ஒரே பாண்டத்திலிருப்பதைப் பிரித்தெடுத்து, முறைப்படுத்தி, வரிசைப்படுத்திதர வேண்டும். இதைச் செய்வதற்கு இதுதான் தக்க காலம் என்று கருதுகின்றேன்.
ஏனென்றால், இப்போது அதற்கான விழிப்புணர்ச்சியும் ஆற்றலும் நிரம்ப இருக்கின்றன. இந்தச் செயல் நடைபெற்றால் தான், தமிழின் தொன்மையும், தமிழின் இனிமையும், பெருமையும், தமிழர்களால் தெளிவாக உணரப்பட முடியும்; தமிழினம், தமிழ்ப் பண்பு, தமிழ் அரசு தழைக்க முடியும்.
– அறிஞர் டாக்டர்
சி.என். அண்ணாதுரை
தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர். மறைமலை அடிகள் நினைவு மலர்.
நாகைத் தமிழ்ச் சங்கம்