❖ தலைவர்கள் பார்வையில் மறைமலையடிகள் ❖ |
சான்றோர் சி.என்.முத்துரங்க முதலியார், பேராசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியார், ஆசிரியர் இளவழகனார் நாரண துரைக்கண்ணனார் முதலிய எத்துணையோ பலர்,அடிகளிடம் தமிழ் பயின்று சிறந்த பெருமக்களாவர்.
தமிழை வளர்க்கும் தொண்டில் தலை நின்ற அடிகளார்,தமிழகத்திற்கே தனிச் சிறப்பாக உரிய சைவசித்தாந்தக் கொள்கையினைப் பரப்பி வளர்க்கவும், மிக விரும்பி முற்பட்டு முயன்றார்.அதன் பயனாக 7-7-1905 அன்று, திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் அவர்களின் திருமடத்தில் அவர்களின் திருமுன்னிலையில்,‘சைவ சித்தாந்த மகாசமாசம்’ என்னும் சமயப் பெரு நிறுவனம் ஒன்றைத் தோற்றுவித்து, அதன் வளர்ச்சி குறித்துச் சிறந்த முறையில் பெருந்தொண்டு ஆற்றினார்.இன்று அது கடல் கடந்த வெளிநாடுகளிலும் பரவிப் புகழ்பெற்றுப் பல அரும்பெரும் பணிகளை ஆற்றி விளங்கி வருகின்றது.
அடிகளார் தம்முடைய 27ஆம் அகவையில் 'ஞானசாகரம்'அல்லது ‘அறிவுக்கடல்' என்னும் பெயரில், ஒரு சிறந்த தமிழ் இதழைத் தொடங்கி நடத்த முற்பட்டார். அதன்கண் வெளிவந்த அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், தமிழறிஞர்களுக்குப் பெரு விருந்தாக இருந்தன. உறங்கிக் கிடந்த தமிழ் மக்களைப் பல்லாற்றானும் தட்டி எழுப்பின. அடிகளாரின் பல நூல்கள் முதன் முதலில், அவ்விதழிற் கட்டுரைகளாக வெளிவந்தனவே யாகும். அதன்கண் வெளிவந்த ‘கோகிலாம்பாள் கடிதங்கள்’ ‘குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி' என்னும் நூல்களைத் தம்முடைய இளமைக் காலத்திற் படிக்க நேர்ந்ததன் பயனாக,பிற்காலத்தில் புதினங்களும்,சிறுகதைகளும் எழுதும் அறிவும் ஆர்வமும் ஏற்பட்டன என்று ‘கல்கி’ அவர்கள் குறிப்பிட்டுள்ளார் எனின், ‘அறிவுக்கடல்’ இதழின் அருமை பெருமைகளை யாம் என்னென்போம்! இவ்வாறே 'கீழைநாட்டுச் சித்தநெறிக்குயில்' (The Oriental Mystic Myna) என்னும் ஓர் ஆங்கில இதழையும் அடிகளார் சிலகாலம் தொடங்கி நடத்தி வந்தார்கள்.பின்னர் சில