❖ மறைமலையம் 1 ❖ |
ஆண்டுகள் ‘அறிவுக்கடல்' (The Ocean of Wisdom) எனும் ஓர் ஆங்கில இதழை, அடிகளார் நடத்தினார்கள்.இவற்றில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரைகள் மேனாட்டு அறிஞர்கள் பலரின் பெற்றன. சைவசித்தாந்தம் ஒரு நடைமுறையறிவுக் கோட்பாட்டுக் கொள்கை' (Saiva Siddhantha as a Philosophy of Practical Knowledge) என்னும் அடிகளாரின் அரும்பெறல் ஆராய்ச்சி ஆங்கில நூலுக்கு,‘ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்தில் கோட்பாட்டுப் பேராசிரியராகப் புகழோங்கி விளங்கியிருந்த எப்.சி.எஃச் சில்லர் (F.C.S. Schiller) என்னும் பேரறிஞர் அணிந்துரை அளித்துள்ளார்.எனின், அடிகளாரின் அளப்பரும் அறிவாற்றல் நலங்களை ஓரளவேனும் நாம் உணர்ந்துகொள்ளுதல் கூடும்.
அடிகளார் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில்,ஏறத்தாழ 13 ஆண்டுகள் பணியாற்றினார்.கல்லூரியில், உயர்வகுப்பு மாணவர்களுக்குத் தாய்மொழிப்பாடம் ஆங்கிலம்போல் இன்றியமையாத ஒன்றன்று என,அந்நாளில் இருந்த பல்கலைக் கழக உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.அதன் விளைவாகப் பல தமிழறிஞர்கள் வேலைவாய்ப்பு இழந்தனர்.அவர்களள் நமது அடிகளாரும் ஒருவர். அந்நிலையில் தமிழ்,வடமொழி,ஆங்கிலம் என்னும் மூன்றிலும் பெரும் புலமை பெற்றிருந்த அடிகளார்க்கு எத்துணையோ பல துறைகளில் இருந்த பெரிய பதவிகளும் வேலை வாய்ப்புக்களும் தேடிவந்தன.எனினும் வெறும் பொருள் வருவாய் ஆகிய ஊதியம் மட்டுமே கருதி,அவைகளை ஏற்க அடிகளார் மறுத்து விட்டனர். இனி “எமது வாழ்க்கையை இறைபணிக்கே ஒப்படைப்பேம்” என உறுதி பூண்ட அடிகளார் தி.ஆ. 1942 (27-7-1911) இல் துறவுநெறி வாழ்க்கையை மேற்கொண்டு, (மறைமலையடிகள்) எனப் பெயர் தாங்கினார்.
அடிகளாரின் பல்லவபுரம் மாளிகைக்கு தி.பி.1942 கார்த்திகை -16 (1-12-1911) இல் அடிப்படை இடப்பட்டது.மாளிகை பகுதி பகுதியாகக் கட்டப்பெற்றது. தி.பி.1950 வைகாசி-6 ((19-5-1919) அன்று அது முழுவதும் நிறைவெய்தி 'மனைபுகும் மங்கல