❖ மறைமலையம் 1 ❖ |
அடிகளார் கொள்கைக்காக வாழ்ந்தார்;எதிர்ப்புக்கு அஞ்சாதவர்; முற்போக்குணர்வு கொண்ட மூதறிஞர்; பரந்த மனப்பான்மையுடைய பண்பாளர்; சீர்திருத்தச் செம்மல்;செந்தமிழ்ச் சிவநெறித் தலைவர்;சைவ சித்தாந்தச் சான்றோர்; தொல்காப்பியரும் திருவள்ளுவரும் நக்கீரரும் இளங்கோவடிகளும் சிவஞான முனிவரும் போன்ற சான்றோர்கள் பலரும் ஒருங்கு திரண்டு வந்த ஓருருவ மாயினாற் போன்ற பெருந் தகையார். தமிழ் னிமையான மொழி என்பதை அவர் தம் தமிழ் நடையின் வாயிலாக எவருமே உணரலாம்.
இன்றையத் தமிழ்நாடு அரசு,மறைமலை அடிகளாரின் கொள்கைகளையும் கருத்துக்களையும்,மிகப் பெரும் அளவில்,நன்முறையிற் செயற்படுத்தி வருகின்றது.இன்று எல்லாத் துறைகளிலும் தமிழ் வளர்ச்சியுற்றுத் தலை நிமிர்ந்து நிற்கின்றது.அறமன்றங்களிலும் மிக விரைவில் தமிழ்மணம் கமழ இருக்கின்றது.
இவற்றிற்காக எல்லாம் பல ஆண்டுகட்கு முன்னரே,அடிப்படை வித்திட்டுப் பெரிதும் உழைத்தவர் ஆசிரியர் v! அப் பெருந்தகையார் தி.பி.1981 -ஆவணி -3 (15-9-1950) ஆம் நாளில்,இவ்வுலகை விட்டு மறைந்தார். எனினும் அவருடைய தொண்டும், நூல்களும்,புகழும் என்றுமே தமிழர்களின் உள்ளத்தில் மறையாத பெருநிலையைப் பெற்றுவிட்டன.
-மறைமலை அடிகள் நினைவு மலர்
நாகைத் தமிழ்ச்சங்கம்