பக்கம்:மறைமலையம் 1.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxi



முதற்குறள் வாத நிராகரணம்

முதற்குறளகிய,

”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”

என்பது அறிஞர்கள் பார்வையில் பலதிறப் பொருட் கூறுகளுக்கு இடமாகி இன்றுவரை தொடரவே செய்கின்றது.

பரிமேலழகர் முதலாம் உரையாசிரியர்களொடு, புத்துரை காண்பாரையும் ஒருநிலைப்படாவகையில் தருக்கப் பொருளாகவே இருந்து வருகிறது.

ஆதி பகவன் என்பது கொண்டு பொருந்தா இழிமைப் புனைவும் உலாவந்தது! அம்மையப்பன் எனவும் காணப்பட்டது.

முதற்குறள் உவமை எனப்பேரறிஞர் கு. கோதண்ட பாணியாரால் 200க்கு மேற்பட்ட பக்க அளவில் ஆய்வு நூலும் வெளிப்பட்டது.

பகவன் என்பது ‘பகலவன்’ என்பதன் தொகை எனவும் பலர் கருதினர்.

தொல்காப்பியப் பாயிர உரை போல் முதற்குறளும் அறிஞர்களின் தருக்கப் பொருளாய் முடிந்த முடிவு எட்டாமல் தொடரவே செய்கின்றது. முதற்குறள் வாத நிராகரணம் என்பது அடிகளார் காலம் வரை காணப்பட்ட உரைகளைக் கூறி அவற்றை மறுத்துத் தம் கோள் நாட்டியதாகும். அது வெளிப்பட்ட ஆண்டு 1898.

-இரா. இளங்குமரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/32&oldid=1607941" இலிருந்து மீள்விக்கப்பட்டது