இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மறைமலையடிகளும் கா.சு. பிள்ளையும் எனக்கு வலக்கையும் இடக்கையும் போன்றவர்கள்.
- தந்தை பெரியார்
எக்காலத்திலும் பயன்படக்கூடிய நூல்கள் தமிழில் ஏராளம் உண்டு. அவற்றில் எல்லாம் நல்ல புலமை பெற்றிருந்த மறைமலையடிகள், பல்வேறு கருத்துக்களை - தமிழன், தனியானதோர் மாண்புக்கு பண்புக்கு உரிமையாளன் என்பதை வலியுறுத்தும் கருத்துக்களை மிகத் துணிவோடு எடுத்துச் சொன்னார்.
- பேரறிஞர் அண்ணா
ஒரு முறை சில மணித்துளிகள் அடிகளுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்பின் அவரது நூல்களைப் பற்றித் தெரிந்த பின்பு அவருடைய ஆழ்ந்த கருத்துக்கள் எவ்வளவு விலை உயர்ந்தவை என்பதை அறிந்தேன்.
- மூதறிஞர் கோ.து. (G.D.) நாயுடு
2, சிங்காரவேலர் தெரு,
தியாகராயர் நகர், சென்னை - 600 017
தொலைபேசி : 044 24339030