❖ மறைமலையம்-1 ❖ |
இந்நூலைப் பற்றிய குறிப்புரை...
மக்களின் நாகரிக வாழ்விற்கும், உடல் தூய்மைக்கும், உளத்தூய்மைக்கும், நோயற்ற பெரு வாழ்வுக்கும், அறிவார்ந்த இன்பத்திற்கும் இந்நூல் துணை நிற்கிறது, பொருந்தும் உணவு பொருந்தா உணவு, கொல்லாமை கால்லாமை, புலால் உண்ணாமை சைவ உணவுக்கு மாறான கொள்கைகளின் மறுப்பு என்பன கட்டுரை அமைப்புகளாகும்.
இயற்கை வழங்கும் உணவுப் பொருள்களின் உய்வனவுகள் கேடுறாத வகையில் அவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறார் அடிகளார். பல் வகைப் பண்டங்களையும் மாறிமாறி உட்கொண்டு பல்வகை உய்வனவுகளைப் பெறுதலும், இடம் காலம் உடலியல்பு ஆகியன உணர்ந்து, சுவைத்துண்டு வாழ்ந்து உழைப்பதும் நீடிய நல்வாழ்வுக்கு வழியாகும்.
ஊன் உன்பது உடல் தொல்லைகளைப் பெருக்கும். பயிர் பச்சைகளையும் அவற்றின் பயன்களையும் உண்பது உடல் நலனுக்கு உகந்தது. சைவ உணவு கொள்ளும் இயல்பினரே இறையுணர்வின் இயற்கைக்கு இசைந்து நடப்பவர்கள்; புலால் உண்பவர்கள் பயன்பாட்டறிவும் ஆற்றலும் பெறார் என்பன அடிகளாரின் உணவுக் கொள்கை களாம்.
-டாக்டர் நா. செயப்பிரகாசு
மறைமலையடிகள் இலக்கியப்படைப்புகள் (பக். 12)