பக்கம்:மறைமலையம் 1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11


நூலுரை

உயிர் வாழ்வுக்கு இன்றியமையாதது உணவு. பசி என்பது உயிரின் தோற்றத் தொடும் வந்தது; உயிர் உள்ளவரை உயிராக இருப்பது. அவ்வுணவு இல்லையேல் எவ்வுயிரியும் உயிர்வாழ்வுக்கு இன்றியமையாதது உணவு. பசி என்பது உயிரின் தோற்றத்தொடும் வந்தது; உயிர் உள்ளவரை உயிராக இருப்பது. அவ்வுணவு இல்லையேல் எவ்வியுரியும் உயிர்வாழா!

தவத்திரு மறைமலையடிகளார் தம்மையே ஆய்வகமாகக் கொண்டு எழுதிய எழுத்தே ‘பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்’. அடிகள், அறிவியல் ஆய்வர் நூல்களையும் அழுந்தக் கற்றவர், தாம் பயன் கொண்ட நூற்பட்டியையும் அடிகள் இணைத்துள்ளார்.

அடிகளார் அழுந்தக் கற்றவர்; ஆழ்ந்த சிந்தனையர்; மும்மொழி மாண்பர்; முறையான உடலோம்பர்! உயரிய கலைச் சொல்லாக்கி! ஊன்றிய உளநோய் மருத்துவரும் கூட! அதனால் வள்ளுவச் சொல் ஒன்று அவருள் படிந்து படிந்து பாரிய வெளிப்பாடாகப் ‘பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்’ என வெளிப்பட்டிருக்க வேண்டும்!

ஊன் என்பர்; கறி என்பர்; புலவு என்பர்; இருவகை வழக்குகளிலும் உள்ளவையே இவை. இவற்றினும் மேலாம் சொல்லாம் ‘புலா அல்’ (புலால்) என்பதைப் படைத்தார் வள்ளுவர்!

புல்லுதல், பொருந்துதல், “புல்லிக்கிடந்தேன்” என்னும் குறள் பொருந்துதல் பொருள் தருதல் அறிக.

புல் உணவு, பொருந்தும் உணவு

புலால் (புல்+ஆ+ஆல்) ஆ எதிர்மறை இடைநிலை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/44&oldid=1603187" இலிருந்து மீள்விக்கப்பட்டது