❖ மறைமலையம்-1 ❖ |
பொருந்தாத உணவு
அடிகள் வெளிப்படக் குறளைக் காட்டவில்லை எனினும், வள்ளுவ உள்ளீடு இஃதாம்.
மன்னும் அந்தணன் யானே என்ற சான்றோரும் புலவு கடிந்த வாழ்வினர் அல்லர்.
“மட்டுவாய் திறப்பவும் மைவிடை ஊழ்ப்பவும்
அட்டான் றானாக் கொழுந்துவை ஊன்சோறு
பெட்டாங் கீயும்’ பெருவளம் கொண்டவரும். உண்டவருமே. ஆவர்
அகந்தண்ணிய அந்தண்மைச் செந்தண்மை தன்னூன் ஓம்பவே மன்னூன் ஓம்பற்கே எனக் கொண்டது, புலால் மறக்குமே யன்றி, அவ்வூணால் கொலைக்குத் துணை நில்லாது. ஆதலால், பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் என்னும் தலைப்பே வள்ளுவர் உள்ளம் தழுவிய படைப்பாம்.
உணவின் தேவையை, “உடம்பிலுள்ள எல்லா உயிர்களும் தம் உடம்பைப் பாதுகாக்கும் பொருட்டும் அதனால் இன்பத்தை அடையும் பொருட்டும் பலதிறப்பட்ட முயற்சிகள் செய்வனவாய் இருக்கின்றன. இம் முயற்சிகள் செய்யச் செய்ய உடம்பின்கண் உள்ள வலிவு குறைதலால் திரும்பத் திரும்ப அதற்கு வலிவேற்றும் பொருட்டு இசைவான உணவை அடிக்கடி உட்கொள்ள வேண்டுவது கட்டாயமாகின்றது” என்று கூறுகிறார்.
ஊட் உணவை (வைட்டமின்) உய்வனவு எனக் கலைச் சொல்லாக்கும் அடிகள், முதல் உணா, கொழுப்புணா, இனிப்புணா, உப்புணா, நீருணா என ஐந்தாக மருத்துவ ஆய்வர் நூன்முறைப்படி ஐவகையாகப் பகுக்கிறார்.
இந்த ஐவகை உணவும் எவ்வெவற்றில் மிக்குள என்பதையும், இவ்வொவ்வொன்றன் பயன்பாட்டையும், இவை இல்லாக்கால் ஏற்படும் நோய் விளைவுகயுைம், இயல்பாக உணவுப் பொருளில் இருக்கும் உய்வனவுகளை வறிதே போக்கிக் கெடுக்கும் அறியாமையையும், காலம் இடம் நிலை அறிந்து உண்ணுதலையும் உண்ணவேண்டும் முறையையும், நாளைக்கு