பக்கம்:மறைமலையம் 1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16

❖ மறைமலையம்-1 ❖

வளர்ப்பதோடு உடம்புக்கு இன்றியமையாது வேண்டிய சுண்ணம் காந்தமண் சாம்பருப்பு உவர்க்காரம் இரும்பு பசுமஞ்சள்6 முதலியவற்றையுந் தருவதாகும்; “நீருணா” வென்பது இரத்தத்திற்கு முதன்மையாக வேண்டப்பட்டு எல்லா உணவுப் பண்டங்களிலும் மிகுதியாயிருப்பதாகும்.

இனி, நரம்பு நரம்பின்றசை மூளை சிறுநரம்பு என்னும் இவற்றை வளர்த்து வலிவேற்றும் முதலுணா என்னும் வகையில் அடங்கும் உணவுப் பண்டங்கள் யாவையோ வென்றால் அவை தயிரும், பால்நீரும், கோதுமை, பருப்பு, உழுந்து, கடலை முதலியவற்றிலுள்ள பசையுமாகும்.

கொழுப்புணா வென்னும் வகையில் அடங்குவன: பாலினின்று எடுக்கும் வெண்ணெயும் நெய்யும், ஒலிவ நெய்யும், கோதுமை, எள் முதலியவற்றின் நெய்யும் ஆகும்.

இனிப்புணா வென்னும் பகுப்பில் அடங்குவன சர்க்கரை, பசைமா, மரநார் முதலியனவாகும்.

உப்புணா வென்பன, எரிகந்தகச் சுண்ணமும், வழக்கத்திலுள்ள உப்பும் ஆகும்.

நீருணாவென்பன: தண்ணீரும், நீராளமாயிருக்கும் பல்வகைப் பருகுநீர்களுமாகும்.

இனி, இவ் ஐவகை உணவின் பகுதியும் ஒருங்கு கலக்கப் பெற்ற உணவுப் பொருள்கள் யாவையோவெனின், அவை வருமாறு: பால் பாற்கட்டி பாலேடு வெண்ணெய் நெய், கோதுமை, அப்பம் கோதுமைமா கம்புமா சோளமா வாற்கோதுமைமா, அரிசி, எள் கொள் தினை கேழ்வரகு அவரை நிலக்கடலை, முந்திரிப்பருப்பு வாதுமைப்பருப்பு துவரம்பருப்பு உழுத்தம் பருப்பு, காளான் அரைக்கீரை பொன்னாங்காணிக்கீரை தூதுளங்கீரை சிறுகீரை வசலைக் கீரை பூக்கோசு முட்டைக் கோசுக்கீரை, பச்சைப்பட்ட ரணி நிலக்கடலை மொச்சை, சீமை முள்ளங்கி முள்ளங்கி வள்ளிக் கிழங்கு உருளைக் கிழங்கு கொட்டிக்கிழங்கு, அத்திப்பழம், கொடிமுந்திரிப்பழம் பேரீச்சம்பழம் வெள்ளரிப்பழம் கொம்மட்டிப்பழம் பிச்சப்பழம் சீமையிலந்தைப் பழம் எலுமிச்சம்பழம் நாரத்தம்பழம் செவ்வாழைப்பழம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/49&oldid=1572916" இலிருந்து மீள்விக்கப்பட்டது