❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
சேர்த்துக் கொடுக்க,அக் கலவையைத் தின்ற புறாக்கள் நலமுடன் செழிப்பாய் இருந்தன.அதனால், அரிசியினின்று நீக்கப் படுந் தவிட்டில், உய்வனவின் இரண்டாம் வகை மருத்துப் பொருள் உளதாதல் அறியப்பட்டது. அரிசியுணவை உட்கொள்ளும் நந் தமிழ்மக்களுக்கு வருஞ் சோகை பெருவயிறு பக்க நரம்பு வீழ்ச்சி முதலான நோய்கள் இவ்விரண்டாம் வகை உய்வனவின் குறைவினால் வருகின்றன. தவிடு, முளைப்பயறு,வித்துகள்,புளித்தமாநுரை,கீரைகள்,பழங்கள் முதலிய வற்றில் இவ்விரண்டாம் வகை உய்வனவு மிகுதியா யிருத்தலால், அரிசிச் சோறு தின்பவர்கள் இவற்றையுங் கூடச் சேர்த்துத் தின்பார் களாயிற்,சோகை முதலான நோய்கள் அவரை அணுகா; இந்நோய் உள்ளவர்கள், வித்துகள் கீரைகள் பழங்களை அடுத்தடுத்துச் செரிக்கும் அளவாய் உட்கொண்டு வருவார் களாயின் இந் நோய்கள் அவர்களை விட்டு நீங்கிவிடும்.
இன்னும்,உப்பிறைச்சி,உலர்ந்த பழங்கள்,உலர்ந்த காய்கறிகள், நன்றாய்க் காய்ச்சின பால் முதலானவைகளைத் தொடர்பாக உட்கொள்பவர்களுக்குச் சொறி கரப்பான், அசறு என்னும் நோய்கள் வருகின்றன.இந்த நோய் உள்ளவர்க்குப் பல்லீரல் புண்ணாகி இரத்தம் வடிகின்றன; கால்கள் வீங்குகின்றன; தோலின்மேற் சொறி சிரங்குகள் உண்டாகின்றன; இந்நோய் கொண்ட மக்களும் பிற உயிர்களும் சின்னாளில் இறந்துபடுகின்றனர். ஆனால், மேற்கூறிய பண்டங்களைத் தின்பவர்கள், எலுமிச்சம்பழச் சாறேனும், நாரத்தை முதலான மற்றைப் பழவகைகளின் சாறேனுங், கீரைகளேனுங் கூடச் சேர்த்து உண்பராயின், மேற்கூறிய நோய்கள் அவரை அணுகா.ஏனென்றால், இப் பழச்சாறு களிலுங் கீரைகளிலும் மூன்றாம்வகை உய்வனவு ஒன்றிருக் கின்றது. மற்று, இச் சாறுகள் கீரைகளை நன்றாய்க் கொதிக்க வைத்தும் வேகவைத்தும் எடுத்து உட் கொண்டாலோ, இவற்றிலுள்ள இம் மூன்றாம் வகை உய்வனவு கெட்டழிந்து போக,மேற்கூறிய நோய்கள் திரும்பவுங் கிளைக்கின்றன.
இன்னும், பகலவன் வெளிச்சம் நுழையாத இருண்ட டுகளினுள்ளே வைத்து வளர்க்கப்பட்ட பிள்ளைகளும், பால் வெண்ணெய் நெய் எண்ணெய் முதலான பொருள்கள் வேண்டிய அளவு உணவுடன் சேர்த்துக் கொடுத்து வளர்க்கப்