❖ மறைமலையம் 1 ❖ |
படாத பிள்ளைகளும் முரண்டும் வெடுவெடுப்பும் உள்ளவர் களாய் எந்நேரமும் அழுத வண்ணமாய் இருக்கின்றனர்; இவர்களுடைய எலும்புகள் மென்மையாகி வளைந்து விடுகின்றன; தசை நரம்புகளும் பொருத்துகளுந் தளர்ந்து விடுகின்றன.இதனால் இவர்கள் தள்ளாட்டம் என்னும் ஒருவகை நோய்க்கு ஆளாகின்றனர். இவ்வாறதால்,இவர்கள் எடுக்கும் உணவில், நான்காம்வகை வகை உய்வனவு உய்வனவு ஒன்று இல்லாமையினாலேதான் என்று ஆராய்ச்சி வல்ல ஆங்கில மருத்துவர்கள் கண்டறிந்திருக் கின்றார்கள்.
இனி, முழுக்கோதுமையும்,மற்றைக் காய் கறிகளுங் கலவாத தீனியைச் சில சிற்றுயிர்களுக்குக் கொடுத்துப் பார்த்ததில் அவைகளுட் சில குட்டிகள் ஈனாது போயின;ஏனைச் சில குட்டிகள் ஈன்றன; ஆனால், அக் குட்டிகள் விரைவில் மாண்டுபோயின. இதுகொண்டு அவற்றின் தீனியில் ஐந்தாம் வகை உய்வனவு ஒன்று இல்லாதுபோனமை அறியப்படலாயிற்று.
என்றிதுகாறும் எடுத்துக் காட்டிய ஐவகை உய்வன வுகள் நாம் உட்கொள்ளும் உணவிற் கலந்திரா விட்டால், நாம் நோய் இன்றி நீண்டகாலம் நன்கு உயிர்வாழ்தல் இயலாது என்பதை மெக்காரிசன் (Robert Mccorison) என்னும் ஆங்கில மருத்துவர் ஆசிரியர் பெரிதாராய்ந்து எழுதியிருக்கின்றார். இத்துணைச் சிறந்த உய்வனவுகள் அவ்வளவும் இயற்கையிற் கிடைக்கும் உணவுப் பண்டங்களில் இறைவன் றிருவருளால் நன்கமைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நாம் அப் பண்டங்களைப் பயன்படுத்தும் முறையிற் பிசகு செய்வதனால், அவைகளிலுள்ள உய்வனவுகள் அவற்றை விட்டு அகலுகின்றன. ஆதலால், அவை தம்மைப் பிசகாது பயன்படுத்தும் முறைகள் நம்மனோர் மிகவுங் கருத்திற் பதிக்கற் பாலனவாகும்.
உய்வனவுகள் பெரும்பாரும் இயற்கையிலே அமையப் பெற்ற சிறந்த வுணவுப்பொருள் ஆவின்பாலே யாகும். அங்ஙனமே, தாய்ப்பாலுங் குழந்தைகளுக்குச் சிறந்த உணவுப் பொருளாக இறைவனால் அமைத்து வைக்கப் பட்டிருக்கின்றது. ஏனென்றால் இவையிரண்டிலும் முதலுணா கொழுப்புணா இனிப்புணா உப்புணா உய்வனவு முதலியன எல்லாம்