❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
கீரை, இலைக்கோசு, பூக்கோசு முதலியவற்றின் இலைகள் முதலியன. இவ்உய்வனவு சிறிதாகவுள்ள பொருள்கள்: தித்திக்கும் உருளைக்கிழங்கு, சீமைத்தக்காளி, மஞ்சட் சோளம், முளைக் கொள்ளு, தினை, ஏடெடுத்த பால், துவரம் பருப்பு, பட்டாணி, சீமை, அவரை, கோதுமை, சோளம், கம்பு, வாற்கோதுமை, மிளகாய், தேங்காய்ப்பருப்பு, தேங்காயெண்ணெய், நாரத்தஞ்சாறு முதலியன. இஃது இன்னும் மிகச் சிறிதாகவுள்ளவை: தேன், முழு அரிசி, வெங்காயம், உருளைக் கிழங்கு, கடலையெண்ணெய், நல்லெண்ணெய் முதலியன.
முதலாம்வகை உய்வனவு சிறிதும் இல்லாத பண்டங்கள்: வெள்ளைமா, பொறியிற் குத்தின அரிசி, அரைவேக்காடாய்ச் சமைத்த சோறு, கடுகெண்ணெய், வாதுமை நெய், காய்கறி நெய் முதலியன.
இரண்டாம்வகை உய்வனவு நிரம்ப வாய்ந்த பொருள்கள்: சீமைத்தக்காளி, கடுக்கொட்டை (Walnut), பசலைக் கீரை, முள்ளங்கிக்கீரை, கோதுமை, வாற்கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, சீமை அவரை, பட்டாணி, துவரம் பருப்பு, கொள்ளு, எல்லாவகையான கொட்டைகளும், இலைக்கோசு பூக்கோசுக் கீரை, வெங்காயம், ஆவின்பால்,. இது சிறிதாக அமையப் பெற்றவை: வெள்ளைக் கோதுமை அப்பம், முழு அரிசி, அரைவேக்காடுள்ள சோறு, வாழைக்கனி, கத்திரிக்காய், முள்ளங்கி, தித்திப்பான உருளைக்கிழங்கு, கொடி முந்திரிப் பழம், பேரீச்சம்பழம், எலுமிச்சம்பழம், நாரத்தம்பழம் முதலியனவாகும்.
இரண்டாம்வகை உய்வனவு சிறிதுமேயில்லாத உணவுப் பொருள்கள்: வெள்ளைக் கோதுமைமா, பொறியிற் குத்தின அரிசி, வெண்ணெய், எல்லா வகையான எண்ணெய்களும் பாற்கட்டி, சர்க்கரை, பசைமா, பழைய பட்டாணி, தேயிலை, காப்பிக்கொட்டை, தேன் முதலாயின.
மூன்றாம்வகை உய்வனவு மிகுந்துள்ள பண்டங்கள்: புதுக்கோசுக்கீரை, பசலைக்கீரை, முளைகிளம்பின பட்டாணி, துவரை, கொள்ளு, புதிய எலுமிச்சம்பழச் சாறு, நாரத்தம் பழச் சாறு, சீமைத் தக்காளிப்பழமும் அதன் சாறும்: முள்ளங்கிக்-