❖ மறைமலையம் 1 ❖ |
இனி, உண்டது செரித்தற்கும்,செரித்து இரத்தத்திற் கலந்து உள்ளுள்ள உறுப்புகளை ஊட்டி வளர்த்தற்கும் உதவியாக உடம்பைப் பலவகையான முயற்சிகளிற் பழக்கல் வேண்டும்.வியர்க்க வியர்க்கப் பாடுபட்டுப் பொருள் தேடுகின்றவர்களுக்கு உடம்பின் முயற்சியைப் பற்றிச் சொல்ல வேண்டுவதில்லை.அங்ஙனம் மெய்வருந்த உழைப்பவர்களுக்கு உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் நன்றாய் அசைந்து,செந்நீர் டைப்பட ப்படாது ஓடுதற்கும்,செந்நீரிலிருந்தும் மற்ற இடங்களிலிருந்துங் கழிய வேண்டுங் கழிவுகள் அவ்வப்போது வெளிப்படுதற்கும் இடஞ்செய்து வருதலால் அவர்கள் நலமுற்று வாழ்வார்கள் மற்று உடம்புழைப் பில்லாமற், கல்வி கற்கும் மூளை உழைப்புள்ள வர்களுக்கும்,மூளை உழைப்புக்கூட இல்லாமல் தம் ஏவற் காரர் எல்லாத் தொழிலுஞ் செய்ய அவரை வறிதே பார்த்து ரெண்டிருக்கும் முதலாளிகட்கும்,அவரை யொத்த பிறர்க்கும் உடம்பின் உறுப்புகள் வேண்டிய வளவு அசையாமையால்,வியர்வைநீரும் மற்றைக் கழிவுகளும் அகற்றப்படாமல்,உள்ளே இரத்தத்திற் சுவறியும் அடைப்பாக இருந்தும் நோயை மேன்மேல் மிகுக்குமாதலால் அவர்கள் எவ்வளவு மருந்துண்டாலும் அவை தீரா;அவர்கள் உண்ணும் உணவும் மருந்தும் நன்றாய்ச் செரித்துச் செந்நீரிற் கலவாமை யால் அவையிரண்டும் பயன்றராமலே போம்.அத்தகையோர் நலம்பெற்று வாழ்தற்கு அவர்கள் பலவகையான உடம்பு முயற்சிகளைச் செய்தலே ஒப்பற்ற மருந்தாகும்.
இனி,ஒருநாளில் எத்தமுறை உணவெடுக்க வேண்டு மென்று வினவினால்,சிலர் மூன்றுவேளை யென்றுஞ் சிலர் இரண்டுவேளை யென்றுங் கூறுகின்றார்கள்.ஆயினும்,அவரவர் உடம்பின்றன்மைக்கு இசையவுந்,தாந்தாஞ் செய்யுந் தொழின் முயற்சிக்குத் தக்கபடியாகவும் பசி யெடுக்கும்பொ தல்லாஞ் செரிக்கும் அளவாக உணவு கொள்ளுதலே நலமாகும்.ஓயா முயற்சியுஞ் சுறுசுறுப்பும் உடைய சிறுகுழந்தைகட்கு உண்ட உணவு மிகுவிரைவிற் செரித்துப்போதலால்,அவர்கட்கு அடிக்கடி பசி எழும்; பசியெழும்போதெல்லாம் அவர்கள் தமக்கியைந்த உணவை உட்கொள்ளும்படி இடந்தருதலே நன்று; அங்ஙனமின்றி,அவர்கள் மூன்றுவேளைதான் அருந்தல்