பக்கம்:மறைமலையம் 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
44

❖ மறைமலையம் 1 ❖

இயங்கும் உயிர்களிற் காணப்படுஞ் சிவந்த இரத்தம் புலால்நாற்றம் மலநீர்க் கழிவுகள் புற்பூண்டுகளிற் காணப்படாமையானும், இயங்கும் உயிர்கள் தம்மை ஒன்று துன்புறுத்த வந்தக்கால் அதற்குத் தப்பியோட முயலுதல் போலப் பயிர்பச்சைகள் முயலக் காணாமையானும் மரஞ் செடி கொடிகளை அவ்வாறு பயன்படுத்திக் கொள்வது குற்றமாகாது. மேலும், ஊன் உணவின்றி, இயங்கும் உயிர் எல்லாம் உயிர் வாழ்தல் கூடும்; ஆனாற், புற் பூண்டுகளும் அவற்றின் பயனும் இன்றி மற்றை எந்த உயிரும் உயிரும் உயிர்வாழல் கூடுமோ? ஊன்தின்னும் உயிர்களுங்கூட அவ்வூனையே முழுதும் உணவாய்க் கொள்ளாமல், இலை, பூ, காய், கனி, கிழங்கு, வித்துகளையும் உணவாய்க் கொண்டல்லவோ பிழைக்கின்றன! இன்னும், ஊன் சிறிதுந் தின்னாத யாடு மாடு குதிரை யானை மான் கிளி குரங்கு முதலான உயிர்களை நாம் பார்த்தல் போலப் பயிர்பச்சைகளைச் சிறிதுந் தின்னாத எந்த உயிரையேனும் நாம் காணுதல் கூடுமோ; ஊனையே மிகுதியாத் தின்று உயிர் பிழைக்கும் புலி கரடி அரிமா ஓநாய்களுங் கூட இடையிடையே பலவகைப் பச்சிலைகள் விதைகள் கிழங்குகள் முதலியவற்றைத் தின்னல் அல்லாமலும், ஊன் உணவு முற்றும் அகப்படாத காலங்களிற் புற்பூண்டுகளின் பயன்களையே முழுதுந் தின்று உயிர் பிழைத்து வருகின்றன. இம் முறையால் நோக்குமிடத்தும் இயங்கும் உயிர்கள் எல்லாவற்றிற்கும் இயற்கை யுணவான புற்பூண்டுகளும் அவற்றின் பயன்களுமே யாமென்பது நன்கு பெறப்படும்.

இனி, நிலையியற் பொருள்களாகிய புற்பூண்டுகள் இன்றி ஏனை யியங்கியற்பொருள்கள் ஒருசிறிதும் உயிர்வாழ மாட்டாவென்பது மற்றொரு வகையாலுங் காட்டுவாம். ஈ எறும்பு புழு முதல் மக்கள் ஈறான இயங்கும் உயிர்கள் எல்லாம் பிராணவாயுவென்னுந் தூய வன்னுந் தூய உயிர்வளியை உயிர்வளியை[1] மூச்சினுள் ளிழுத்தே உயிரொடு உலாவுகின்றன. இவ் வுயிர்வளியை உட்கொள்ளாமல் மக்களும் மற்றை இயங்கும் உயிர்களும் ஒருசிறிதும் உயிரேடிருத்தல் முடியாது. இவ்வளவு சிறந்த உயிர்வளி மட்டும் புறத்தே எங்கும் நிறைந்திருக்குமாயின்

  1. 3
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/77&oldid=1569156" இலிருந்து மீள்விக்கப்பட்டது