❖ மறைமலையம் 1 ❖ |
மருத்துவர் ஆராய்ந்து பார்த்து இங்ஙனம் நீள்வழி நடந்த தனால் இவருடம்பிற்கு ஏதொரு கெடுதியும் நேராதது கண்டு வியந்தார்.
நம் ஆங்கில அரசினர் படையிற் காயமருத்துவம் பார்த்து வந்த ஒரு சிறந்த மருத்துவர்8 பின்வருமாறு கூறுகின்றார்: “பல தேயங்களிற் பலவகையாலெல்லாம் உழன்றும் என் உடம்பு செம்மையாகவே யிருக்கின்றது. அளவாக உண்பதனாலுங் கடுமையாக உழைத்தலினாலும் யான் இரண்டு படையிருப்புக்களைக் கடத்தி விட்டேன்; இன்னும் ஒரு படையிருப்பினையும் யான் தாங்க் கூடும். நான் ஊன் உணவு எடுப்பதேயில்லை; கொடி முந்திரிச் சாறேனும்9 வித்திலிறங்கிய நீரேனும்10 மற்றெந்தவகைச் சாராயமேனும் 11 பருகுவதுமில்லை; யான் கம்பளியுடுப்பும் அணிவ தில்லை காற்றும் மழையுஞ் சூடுங் குளிர்ச்சியும் எனக்கு ஒரு பொருள் அல்ல.” இதனால் மக்கள் உடம்பின் சூட்டைப் பாதுகாப்பதற்கு இறைச்சியுஞ் சாராயமும் வேண்டுமென்று கூறுவார் சொல் வறும் பொய்யேயாதல் காண்க.
1903 ஆம் ஆண்டில் நூற்று ஏழு ஆண்டு வாழ்நாள் உடையராயிருந்த ஒரு படைத்தலைவர்12 தம் வாழ்நாளின் இடையே நோயால் வருந்திக் கூன்முதுகு உடையராகி வாழ்நாள் முதிரா முன்னரே முதுமையடையப் பெற்றதி லிருந்து மனவெறுப்பு உடையராய் இறைச்சி தின்பதை அறவே விட்டுச் சைவவுணவையே ஒழுங்காக உட்கொண்டு வர, அவர்க்கிருந்த நோயும் விலகி, அவருடம்பின் கூனும் நிமிர்ந்து வலிமையும் இளமையும் பெறலானார். இவர் தமது நூற்று மூன்றாம் ஆண்டில் ஒருநாள் ஒன்றுக்கு இருபது நாழிகை வழி நடந்தும் இளைப்புங் களைப்பும் இன்றிச் செவ்வையான நிலையிலேயே ருந்தார். இவர் தமது பழக்கத்தைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்:
“நீண்டநாள் செம்மையாக உயிர் வாழும்பொருட்டு யான் எனது உடம்பைப் பதப்படுத்தத் துவங்கியபொழுது, உயிர்களைக் கொன்று எடுக்கும் இறைச்சியை என் உணவி னின்றும் அறவே விட்டொழித்தேன். யாடுமாடு அறுக்குங்