பக்கம்:மறைமலையம் 1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54

❖ மறைமலையம் 1 ❖

"தென் அமெரிக்காவின் செப்புச் சுரங்கங்களில் உழைக்குங் கூலியாட்கள் நாள் ஒன்றுக்கு அறுபத்தேழு வீசை எடையுள்ள செப்புமண் மூட்டையைச் சுமந்து கொண்டு ஒருநாள் ஒன்றுக்குப் பன்னிரண்டு முறை இருநூற்று நாற்பது அடி உயரம் ஏறுகின்றனர். அவர்கள் உட்கொள்ளும் உணவு முழுதுங் காய்கறிகளே அவர்கள் காலையுணவாக எடுப்பன பன்னிரண்டு அத்திப்பழங்களும் இரண்டு சிறிய கோதுமை அப்பத் துண்டுகளுமேயாம்; அவர்களது பகல் உணா அவித்த பயறுகளேயாம்: இராச்சாப்பாடு வறுத்த கோதுமை அரிசி, இன்னும் உள்நாடுகளிலிருந்து வரும் ஸ்பானியர்கள் பண்டங்கள் நிரம்பிய மூட்டைகளைச் சுமந்துசெல்லும் அலுவல் பார்க்கிறார்கள்; இவர்களும் முழுதுஞ் சைவ உணவே உட்கொள்பவர்கள். இவர்கள் திண்ணிய வலிய பெரிய உடம்புடையவர்கள். இவர்கள் சுமக்கும் மிகப்பெரிய கோணிப்பை மூட்டைகளை இவர்களின் முதுகின்மேல் தூக்கிவைப்பதற்கே மூன்று நான்கு பேர் வேண்டும். இத்தகைய மூட்டைகளைச் சுமந்து கொண்டு இவர்கள் ஊடேஊடேயுள்ள செங்குத்தான மலைகளின் மேலும் ஏறியிறங்கியபடியாய் ஒருநாள் ஒன்றுக்கு ஐம்பது நாழிகை வழி விரைவாய் நடந்து நாட்டினுட் செல்வார்கள். இவர்களோ டொப்ப நடத்தல் பொதுவாக மற்ற ஆட்கட்கு ஏலாது."

இன்னும் அமெரிக்காவிற் பல அரும்பண்டங்கள் செய்யும் பெரிய ஒரு தொழிற்சாலைக்கு உரிய தலைவர், தம்மிடம் வேலை பார்க்குந் தொழிலாளிகட்குப் பல திறப்பட்ட உணவு காடுப்பதால் வரும் நன்மைகளை அளந்தறிய வேண்டி, அவர்களெல்லாரையும் மூன்று பகுப்புகளாகப் பிரித்து, அவருள் முதற்பகுப்பாருக்கு இறைச்சியுணவும் இரண்டாம் பகுப்பாருக்குக் காய்கறி யுணவும், மூன்றாம் பகுப்பாருக்கு இறைச்சியுங் காய்கறியுங் கலந்த உணவுங் கொடுத்துவந்தார். இவ்வாறு கொடுத்து வந்தபின் அவர்களது வலிமையினையும் அவர்கள் செய்யும் வேலையின் அளவினையும் ஆராய்ந்து பார்க்கச், சைவ உணவு உட்கொண்ட பகுப்பாரே மற்றிரண்டு பகுப்பாரை விட உடம்பு வலிவிலும் வேலையை முடிக்கும் அளவிலும் மிகுந்திருப்பக் கண்டு, மற்ற இருபகுப்பாருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/87&oldid=1569355" இலிருந்து மீள்விக்கப்பட்டது