பக்கம்:மறைமலையம் 1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56



3.பொருந்தா உணவுகள்-2

அங்ஙனமானாற், காய்கறி முதலான சைவ உணவையே முழுதும் உட்கொள்ளுஞ் சைவவேளாளருக்கும் பார்ப்ப னருக்குங் கூடப் பலவகை நோய்கள் வரக் காண்கின்றோமே, அஃதேனெனில், அவர்கள் நோய் வருதற்குரிய வேறு காரணங்கள் உண்டென்பதைக் கருதிப்பாராமல் நடத்தலால் அங்ஙனம் நோய் கொள்கிறார்களென்று அறிதல் வேண்டும். ஊன் உணவை நீக்கினால் அதனால் வருங் கொடு நோய்கள் விலகுவது திண்ணமேயாயினும், ஊனைப்போலவே நோயை வருவிக்கும் காய் கனி வித்துக் கிழங்கு கீரை முதலானவை சைவவுணவிலும் உண்டாதலால், அவற்றையுந் தெரிந்து விலக்கினாலன்றிச் சைவரும் பார்ப்பனரும் நோயில்லாமல் இருத்தல் முடியாது. அதுவேயுமன்றி, அவர்கள் பின்பற்றி நடக்கும் பழக்க வழக்கங்களிற் சிலவும் நோயை வருவிக்குந் தன்மையவாய் இருக்கின்றன. அவற்றுட் சிலவற்றை இங்கெடுத்துக் காட்டுவாம்:

மட்பாண்டங்களில் உணவுப் பொருள்களைச் சமைத்தலே இயற்கைக்கு இசைவதோடு, உடம்பின் நலம் பேணுதற்குஞ் சிறந்ததாகும். நல்ல களிமண்ணில் நோயை நீக்குந் தன்மையுள்ள பொருளேயிருக்கின்றதல்லாமல் அதனை வருவிக்கும் நச்சுப் பொருள் சிறிதுமில்லை.ஆகையால், அத்தகைய களிமண்ணிற் செய்த கலங்களே உணவுப் பண்டங் களைச் சமையல் செய்தற்குப் பொருத்தம் உடையனவாம். இங்ஙனமாகவும், பலர் வீண் பகட்டுக்காக, விலையேறப் பெற்ற செப்புக்கலங்கள் பித்தளைக் கலங்கள் ஈயம் இரும்பு அலுமீனியம் முதலியவற்றிற் செய்த பாண்டங்கள் முதலான வற்றை சமையற்றொழிலுக்கு மிகுதியாகப் பயன்படுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/89&oldid=1624634" இலிருந்து மீள்விக்கப்பட்டது