பக்கம்:மறைமலையம் 1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
58

❖ மறைமலையம் 1 ❖

முதலில் நரம்புகளுக்குக் கிளர்ச்சியை உண்டு பண்ணிப் பிறகு இளைப்பினை வருவிப்பனவாம். மேலும்,இப்பண்டங்களில் உடம்பை வளர்த்தற்கு வேண்டிய பகுதிகள் இல்லாமையால்,இவற்றை உண்பதானால் தீனிப் பைக்கு வீண் உழைப்பினைக் கொடுக்கின்றார்களே தவிர இவற்றிலிருந்து அடையும் பயன் மிகுதியாய் ஒன்றுமில்லை உணவைச் சுவைப்படுததுதற்கும்,வயிற்றிற் சேருங் காற்றைக் கழிப்பதற்கும் மிளகாய் முதலியன பயன்படுகின்றனவேயென்றால்,அங்ஙனஞ் சுவைப்படுத்து தற்குங் காற்றைப் போக்குதற்கும் வேண்டிய அளவுதான் அவற்றைச் சேர்க்கவேண்டுமேயல்லாமல்,அதற்கு மேற்படச் சேர்த்தல் சிறிதும் பொருந்தாதாகும்,சைவர் பார்ப்பனர் சிலர் அமைக்குங் கறி குழம்புகளில் மிளகாய்க் காரம் மிகுந் திருத்தலால்,அவற்றை உண்பவர்கள் நா எரிய வயிறெரியக் கண்ணீர் சிந்த மூக்குநீர் வடியப் படுந்துன்பங் கிட்ட இருந்து பார்ப்பவர்கட்கும் பொருக்க முடியா தென்றால்,அவற்றை உண்பவர்கள் படும்பாட்டை எடுத்துச் சொல்வானேன்! மற்றுஞ் சிலர் செய்வனவற்றிற் புளியும் உப்பும் அளவுக்கு மிஞ்சிக் கலந்து அவற்றை உண்பவர் நாக்கு இற்றுப்போம்படி செய்கின்றன! இத்தகைய காரமான பொருள்களையே உண்டு பழகிப் போன நாவுக்கு மெல்லிய இனிய சுவை தெரிய மாட்டாது. ஆதலினாலேயே,சைவர் பார்ப்பனரிற் சிலர் பலர் மிக்க சுவையுடைய பண்டங்களை உண்ண மாட்ட மாட்டாமல் அவற்றை அருவருத்து இகழுகின்றனர்.

மற்றும் பலர் எந்நேரமுஞ் சுண்ணாம்பைத் தடவித் தடவி வெற்றிலைபாக்கு மென்றபடியாயும் அவையும் போதாவென்று புகையிலையைத் திருகித் திருகிச் சேர்த்துத் தின்றபடியாயுங் காலங்கழிக்கின்றார்கள்.இன்னும் பலர் இவையும் போதாவென்று அடிக்கடி புகையிலைச் சுருட்டுப் பிடிப்பவர்களாயும், புகையிலைத் தூளை ஓயாமல் மூக்கினுள் நுழைப்பவர்களாயும் இறுமாந்து நடக்கின்றார்கள். இந் நச்சுப்பொருள் களை இங்ஙனமெல்லாம் உட்கொள்ளுதலால்,அவர்கள் பலவகை நோய்களை அடைந்து காலம் முதிரா முன்னரே இறந்தொழி கின்றார்கள். இந் நச்சுப் பண்டங்களைத் தின்பவர்கள் கன்னம் வறண்டு ஒட்டிப்போக உதடுகள் கறுக்கக்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/91&oldid=1569166" இலிருந்து மீள்விக்கப்பட்டது