பக்கம்:மறைமலையம் 1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
59

கண்சிவக்க,அவர்களைச் சூழத் தீ நாற்றம் பரந்து வீசத் தலைமயிர் நரைத்திருக்கத்,தோல் திரைந்து சாம்பற் பூக்க அருவருப்புள்ள வடிவமும் அஞ்சத்தக்க பேய்த் தோற்றமுங் காண்டு செல்வதைப் பார்த்தால்,இவர்கள் மிக விரும்பித் தின்னும் பொருள்களின் இயல்பும் இவர்களின் இயற்கையும் பேரிரக்கம் வாய்ந்த இறைவன் அருமையாய்த் தந்த உடம்பை இங்ஙனம் பாழாக்கித் தம்மட்டில் ஒழியாமல்,தம்மோடு உறவு கொண்டிருக்கும் பெற்றோர் உற்றார் பெண்டிர் பிள்ளைகள் நண்பர் முதலாயினார்க்கும் வறுப்பையுந் துன்பத்தையும் நோயையும் விளைத்து மாயும் இவர்கள் பிறந்தபோதே தொலைந்திருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! இது நிற்க.

இனி,இவையும் போதாவென்று இப்போது சென்ற பல ஆண்டுகளாக வேறுசில நச்சுப் பண்டங்களும் உணவுப் பொருள்களாய்க் கிளம்பியிருக் கின்றன.அவை:காப்பி,தேயிலை,கொக்கோ என்னும் இவற்றுள் ஒன்றைக் காய்ச்சி இறக்கிய சாற்றைக் காலை நண்பகல் மாலை இரவு என்னும் நான்கு வேளைகளிலும் முதன்மையான குடிநீராய்ப் பெரும் பாலும் எல்லாரும் பருகுதற்குத் தலைப்பட்டு விட்டார்கள்.இவற்றை முன் குடித்தறியாத நாட்டுப் புறத்தாருங்கூட இப்போது இவற்றைக் குடிக்கக் கற்றுக் கொண்டு இவை யில்லாமல் நாம் உயிர்வாழ உயிர்வாழ முடியாதென்று சொல்லுகிறார்கள்! கல்வி செல்வம் நாகரிகம் என்னும் இவற்றில் தம்மை மேலாக எண்ணியிருக்கும்பலர் நாள் முழுதும் இவற்றைப் பருகுவது தமக்கு இன்றியமையாததாகவும் பெருமையாகவும் எண்ணி நடந்து வருகிறார்கள்! தமக்கு முதன்மையாகவும் பெருமையாகவும் பிழைபட எண்ணி இந்நஞ்சை எந்நேரமும் பருகி இறுமாக்கும் இவர்களின் கல்வியையுஞ் செல்வத்தையும் நாகரிகத்தையும் என்னென் பேம்! உணவுக்காக எடுக்கும் வேறு சில பண்டங்களில் உள்ள நச்சு நீரைக் காட்டினுங் காப்பி தேயிலை கொக்கோ இறைச்சிச்சாறு என்னும் நான்கிலும் அது மிகுந்திருத்தலால் அது தெரியாமல் அவற்றை விரும்பிக் குடிப்போர் கல்வியும் நாகரிகமும் உடையராவரோ; பதின்மூன்றே காற்பலம் எடையுள்ள காப்பிக் கொட்டையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/92&oldid=1597309" இலிருந்து மீள்விக்கப்பட்டது