பக்கம்:மறைமலையம் 1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60

❖ மறைமலையம் 1 ❖

எழுபது குன்றிமணி எடையுள்ள நச்சுநீரும், அவ்வளவே எடையுள்ள தேயிரையில் நூற்று எழுபத்தைந்து குன்றிமணி நச்சு நீருங், கொகோவில் ஐம்பத்தொன்று குன்றிமணி நச்சுநீரும்,இறைச்சியை அவித்து இறக்கிய சாற்றில் அறுபத்து மூன்று குன்றிமணி எடையுள்ள நச்சுநீரும், இருக்கின்றனவென்று அவற்றை நன்கு ஆராய்ந்து பார்த்த புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர் ஒருவர்1 கணக்கிட்டுக் காட்டியிருக்கின்றார். இவைகளைக் குடிநீராக்கிப் பருகு வதால் இவற்றில் மிகுதியாயுள்ள நச்சுநீர் செந்நீரிற் கலந்து பலவகை நோய்களை வருவிக்கின்றது. ஆகவே, இவற்றைப் பயன்படுத்துவது நோய்களை உண்மையாகவே விலை கொடுத்து வாங்குவதாய் முடிகின்றது.நோய் கொண்ட காலங்களிலுங்கூடக் காப்பியுந் தேத்தண்ணீரும் விடாமற் பருகுகிறார்கள்; பார்ப்பனர் சைவரிற் சிலரும், நோய் கொண்ட பொழுது அதனை நீக்குதற்கும் உம்பினை வலிவேற்றுதற்கும் பெரிதும் உதவி செய்யுமென்று பிழைபட நினைந்து, அவித்த இறைச்சிச் சாற்றினையும் முட்டைக் கருவுங் கொடி முந்திரிச் சாறுங் கலந்த கலப்பினையும் உட்கொள்ளுகிறார்கள்; ஆனால் அவர்கள் நினைத்தற்கு மாறாக அவற்றின்கண் உள்ள நச்சுநீர் அவர்க்கு மேலும் பல காடு நோய்களை வருவித்து அவர்களைத் துன்புறுத்தி மாளச் செய்கின்றது. அங்ஙனமாயின்,இவற்றை யுட் கொள்ளும் பலர் நோய் நீங்கி நலம்பெறக் காண்கின்றோமே யெனின் இவற்றின் நச்சுநீர் நோயைச் சிலகாலம் உடம்பினுள் ளேயே அடக்கி வைத்து அதனைப் பெருநோயாகப் பின்னர் வளர்த்து வெளிப்படுத்துகின்றதென நுண்ணிய ஆராய்ச்சியிற் சிறந்த ஆங்கில மருத்துவர் உறுதி கூறுகின்றமையால், முன்னர்ச் சிறு நோயை நீக்கும் அப்பொருள்கள் பின்னர்ப் பெருநோயை வருவிக்குமென உணர்ந்து கொள்க.ஆதலால்,நச்சுநீர் உள்ள காப்பி தேயிலை கொக்கோ இறைச்சிக் சாறென்னும் இவற்றை அறவே விட்டொழித்தலே நலமுடன் வாழ்தற்கு ஒரு சிறந்த வழியாமென்க.

இனிப்,புகையிலை கஞ்சா அவின் சாராயம் முதலான மயக்கந் தரும் பொருள்களிற் கொடியதொரு நஞ்சு2 இருத்தலால் இவற்றைப் பயன்படுத்துகின்றவர்களும்,மேற்கூறிய காப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/93&oldid=1569167" இலிருந்து மீள்விக்கப்பட்டது