பக்கம்:மறைமலையம் 1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖
61

தேயிலை முதலியவற்றை உட்கொள்பவர்களைப் போலவே நோயாற் பற்றப்பட்டு விரைவில் மாளுகின்றார்கள்.காப்பி முதலான குடிநீரைப் பருகுகின்றவர்களுக்கு அறிவு மயங்குவதில்லை;மற்று இந்தப் பண்டங்களை உட்கொள்பவர்களுக்கோ அறிவு மயக்கமும் உடன்வந்து சேர்கின்றது. உடம்பை வளர்த்தற்கு வேண்டும் பொருட்பகுதிகள் சிறிதும் இல்லாத காப்பி தேயிலை கொக்கோ இறைச்சிச் சாறு முதலியவற்றையும் மயக்கந் தரும் புகையிலை கஞ்சா அவின் சாராயம் முதலியவற்றையும் மக்கள் தம் அறியாமையாலும் பிழைபட்ட எண்ணத்தாலும் உட்கொண்டு இறைவன் தந்த இந்த அரிய உடம்பைப் பாழாக்குதல் ஐயோ எவ்வளவு வருந்தத் தக்கதாயிருக்கின்றது!

புகையிலை தின்பவர்களும் புகைச் சுருட்டுப் பிடிப்பவர்களும் நரம்பு வலிவிழந்து இரத்தங்கெட்டு மூளை மங்கலுற்று விரைவில் மாளு கின்றார்கள் என்று ஆங்கில மருத்துவரிற் பலர் செவ்வையாக ஆராய்ந்து பார்த்துக் சொல்லுகிறார்கள். இதனாற்றான் அமெரிக்காவில் மிகச் சிறந்த ஒரு கல்விக் கழகத்தின் தலைவர்3 வீட்டிலாவது வேறிடத்திலாவது புகைச் சுருட்டுப் பிடிக்கும் எந்தப் பையனையுந் தமது கழகத்தினுட் சேர்ப்பதேயில்லை. புகையிலையிலுள்ள நஞ்சு மூளையைக் கெடுப்பதால் அதனைப் பயன்படுத்துகின்றவனுக்குக் கல்வியும் தின்பவர்கட்கும் புகைச் சுருட்டுப் பிடிப்பவர் கட்கும் புகையிலைத் தூள் மூக்கினுட் செலுத்துபவர்கட்கும் நாளேற நாளேற உடம்பிலுள்ளவலிமை கெடுதலால், அவர்களில் ஆண்மக்களாவார் ஆண்டன்மை இழந்தும் பெண் மக்களாவார் பெண்டன்மை இழந்தும் உலகின்கண் வெறிய நடைப் பிணங்களாகவே திரிகின்றனர் என்றும் இவ்வுண்மையை ஆராய்ந்து கண்ட மருந்து நூலார் உறுதி கூறுகின்றார்கள்.புகையிலையை எந்த வகையி லாயினும் பயன்படுத்துகின்றவர்கள் அருகிருந்தால்,மற்றவர்கள் அவர்களிடத்து அன்புடையவர்களாயினும் அவர்களிடத்து அந்நேரத்திலும், பிறகு அவர் தன்மையை நினைக்கும் பிற நேரங்களிலும் அருவருப்படையாமல் இருக்க முடிவதில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/94&oldid=1597310" இலிருந்து மீள்விக்கப்பட்டது