❖ பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் ❖ |
அழுக்கும் நிறைந்த வராய் உள்ள அவர்களைப் பெரியோ ரென்றல் வேறு எவ்வகையாலோ அறிகிலேம்! அதுநிற்க.
இனிக், கஞ்சாவைவிடத் தீயதன்மை வாய்ந்தது அவின். அவின் தின்பவர் தூக்கமும் அறிவு மயக்கமும் மிகுதியும் உடையர். அவரது தீனிப்பை அவின் நஞ்சாற் செயலிழந்து போக,உண்ட உணவு செரிமானத் திற்கு வராமல் அவர் வயிற்றுவலியால் துன்புறல் காணலாம். அத்துன்பம் பொறுக்க மாட்டாமல் அவர் மறித்தும் மறித்தும் அவின் உண்டு மயங்கிக் கிடந்து சடுதியில் உயிரைத் துறக்கின்றார்கள்.ஆதலால், இந்தக் கொடிய நஞ்சும் முற்றும் விலக்கற்பால தொன்றாம்.
இனி,இவையெல்லாவற்றினுங் கொடிய நஞ்சாகிய சாராயத்தின் பொல்லாங்கை உணராமல் அதனைக் குடிப்பவர் இவ்வுலகத்திலேயே நிரயத் துன்பத்தை உழப்பவர் ஆவர்.அவர்கள் தம் உடம்பையும் அறிவையும் பாழாக்கி,உண்ணச் சோறும் உடுக்கக் கூறையும் இன்றி வறியராய் உழல்வதொடு தம்மைச் சேர்ந்தவரையுந் தம் வயிற்றிற் பிறக்கும் பிள்ளை களையுங் கூட அத் துன்பத்திற்கு ஆளாக்குகின்றமை எல்லாரும் அறிந்த உண்மையன்றோ? ஆனால்,மருத்துவரிற் சிலர் மட்டும் இதன் தீங்கிளைப் பகுத்துணராமல், இதனை நோய் நீக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று சொல்லித் தம்பால் வரும் நோயாளிகட்கு இதனை அருந்தக் கொடுக்கின்றார்கள்; இதனை உண்ண வேண்டாதவர்களையும் உண்ணும்படி வற்புறுத்துகின்றார்கள்.ஆனால், இதனை ஆராய்ந்து பார்த்து இதிற் கலந்துள்ள பொருள்களைப் பகுத்துக் கணக்கிட்ட இயற்கைப் பொருள் நூலாரோ4 கொடிமுந்திரிச் சாராயத்தில் தண்ணீர்,மயக்க நஞ்சு5, சர்க்கரை,புளிப்பு என்னும் நான்குமேயன்றி,புற்று நோய் நீக்குங் கரு எதுமேயில்லையென்று முடிவுகட்டி யிருக்கின்றார்கள். இன்னுஞ் சாராயத்தின் வகைகளான பீர்,பிராண்டி,ஜின் உவிசிக்கி, இரம் என்பவைகளும் மயக்க நஞ்சுந் தண்ணீரும் பல அளவாய்க் கலப்பதனால் உண்டாவனவே யல்லாமற் பிற அல்ல எனவும் உறுதி கூறுகின்றார்கள். கொடிமுந்திரிச் சாராயத்திலுள்ள நான்கு பொருள்களில் தண்ணீருஞ் சர்க்கரையும் புளிப்பும் மற்ற