64 |
❖ மறைமலையம்-1 ❖ |
உணவுப் பண்டங்களில் ஏராளமாயிருக்கின்றன; ஆதலால்,அவற்றுக்காகச் சாராயத்தைப் பருக வேண்டுவதில்லை.மற்று,உணவுப் பொருள்களில் இல்லாத மயக்கநஞ்சு மட்டுமே இதன்கண் இருப்பதால் இது மக்கள் உடம்பையும் உணர்வையும் பாழாக்கும் இயல்பின தன்றி வேறொரு பயனுந் தருவதன்று. இம் முயக்கநஞ்சு குளிர் நோய் வராமற் றடுத்தற்குந், தூக்கமின்றி நோயாற் றுன்புறு கின்றவர் தூக்கங்கொண்டு அந்நோயை மறந்திருத்தற்கும் உதவி செய்தலால் இதனையுடைய சாராயத்தை முற்றும் விலக்கல் ஆகாதெனின்; இஃது அவ்வாறு ஒரு சிறிது பயன்படுவதே யென்றாலுங், குளிர்நோயுந் தூங்கா நோயும் இல்லாதவர்கள் அதனைப் பயன்படுத்துதல் ஏன் எனக் கூறி மறுக்க. மேலும், இவ்விரண்டு நோய்க்கும் இதனைப் பயன்படுத்துங்காலும், இது மூளையை வலி குறைத்து அப்பயனைத் தருதலானுந், தீனிப்பையைக் கெடுத்து இரத்தத்தை நஞ்சாக்குதலானுங்,குளிர் நோய் குளிர் காய்ச் சலை நீக்குதற்கு உள்அருந்த ஓமத்தண்ணீரும் வெளியே ஒற்றச் சூடேற்றிய சாம்பல் ஒற்றடமும் இருத்தலானும்,இம் மருந்தொடு மலக்குடரைக் கழுவி மெல்லிய உணவு கொடுக்கவே தூக்கந் தானே வருமாக லானும் இவற்றின் பொருட்டு இந்நஞ்சைக் குடித்தல் எவ்வாற்றானும் ஆகாதென்க.
சாராயம் மூளையைக் கெடுப்பது எவ்வாறெனில், அருந்தியவுடனே அது மூளையிலேறித் தீங்கு விளைத்தலைச் சிறந்த ஓர் ஆங்கில மருத்துவர்6 பலபடியாலும் நன்காராய்ந்து கண்டிருக்கின்றார். அவர்,ஒருமுறை இரண்டுபலஞ் சாராய நஞ்சை நல்ல ஒரு நாய்க்கு அருத்த அது தடியால் தலையடியுண்டதுபோல் உடனே செத்துப் போயிற்று. அவர் அதன்பின் ஒரு நொடிப் பொழுதுந் தாழாமல் அதன் மூளையை அகற்றி ஓர் ஏனத்தில் வைத்துச் காய்ச்சி வடிக்கவே அதிலிருந்து அச்சாராய நஞ்சின் பெரும்பகுதி இறங்கிற்று. இங்ஙனமே,இன்னுஞ் சில நாய்களுக்கும் அவர் அச்சாராய நஞ்சைக் காடுத்து அவை செத்தபின் அவற்றின் மூளை, செந்நீர்,பித்து,ஈரல் முதலான உடம்பின் உறுப்புகளை யெல்லாந் தனித்தனியே பிரித்தெடுத்துக் காய்ச்சி வடிக்க,மற்றவைகளை