பக்கம்:மறைமலையம் 1.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66

❖ மறைமலையம் 1 ❖

சீமையவரை, பட்டாணி, சீமைப்பட்டாணி, வேர்க்கடலை, பாற்கட்டி முதலிய சைவ உணவுப் பொருள்களிலும் முதலுணாவின் கரு மிகுந்திருக்கின்றதென இயற்கைப் பொருணூலார் நன்காராய்ந்து கணக்கிட்டிருக்கின்றார்கள்.யாங்ஙன மெனிற்,காட்டுதும்; ஆட்டிறைச்சியிலும்,மீனிலும் நூற்றுக்குப் பதினெட்டுப்பங்கும்,முட்டையின் வெள்ளைக் கருவில் இருபது பங்கும்,மஞ்சட்கருவிற் பதினாறு பங்கும், மாட்டிறைச்சியிற் பத்தொன்பது பங்கும்,பன்றியிறைச்சியில் ஒன்பது பங்கும் முதலுணாவின் கரு அமைந்திருப்பச் சைவ உணவுப் பொருள்களான முழுப்பாற் கட்டியில் நூற்றுக்கு முப்பத்தொரு பங்கும், அவரையில் முப்பது பங்கும் பச்சைப் பட்டாணியில் இருப்பத்தைந்து பங்கும், கோதுமையில் இருபத்திரண்டு பங்கும், வேர்க்கடலையில் இருபத்து நான்கு பங்கும்,அம் முதலுணாவின் கரு இறைச்சியினும் பார்க்க மிகுந்திருத்தலால், இவற்றைச் செரிக்கும் அளவாக உண்பவர்க்கு உடம்பின் உறுப்புகள் மிக்க வலிவுடன் வளருமென்பது சொல்லாமலே பெறப்படும். இங்கு முதன்மையான மற்றொன்றும் கருதற்பாலது.உடம்பினுட் கொழுப்பினை வளர்த்தற்கும், உடம்பினுள் உயிர்வாழ்தற்கு இன்றியமையாத சூட்டினைப் பிறப்பித்தற்கும் வேண்டப்படும் இனிப்புணாவின் கரு சைவ உணவுப் பொருள்களில் இருக்கின்றன வேயல்லாமல், ஊன் உணவு எதிலும் இல்லை யென்று இயற்கைப் பெருணூலார் ஆராய்ந்து விளக்கி யிருக்கின்றமையின், ஊனுணவையே மிகுதியாய் உண்பவர்கள் நீண்டநாள் உயிர் பிழைத்திராரென்பதும், உயிரோடிருக் குஞ் சில நாட்களும் நோய் கொண்டு துன்புறுவா ரென்பதுந் திண்ணமாமென்க. மற்றுயாம் மெலெடுத்துக் காட்டிய சைவ உணவுப் பொருள்களில் மட்டுமே உடம்பினுள் உறுப்புகள் எல்லா வற்றையுஞ் செவ்வையாக வளர்க்கும்.எல்லாக் கருப்பொருள்களும் இனிதமைந்திருத் தலால் அவற்றை உண்பவர்களே நீண்ட நாள் நன்கு உயிர்வாழ்வரென்க.

இனிச். சைவ உணவுப் பொருள்களிலும் நச்சுநீர் இல்லாதனவும், உடம்பினுறுப்புக ளெல்லாவற்றையுஞ் செவ்வனே வளர்க்குங் கூறுகள் எல்லாம் அமைந்தனவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_1.pdf/99&oldid=1569170" இலிருந்து மீள்விக்கப்பட்டது