பக்கம்:மறைமலையம் 10.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

66

மறைமலையம் 10

'குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலும் மாண்பே’

என்றும்,

"இன்று கொளற்பால நாளைக் கொளப் பொறான், நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன் ஆவன கூறின் எயிறலைப்பான் ஆறலைக்கும் வேடலன் வேந்தும் அலன்”

என்றும்,

“கெடுவல்யான் என்ப தறிகதன் னெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்’

(குறள் 116)

என்றும் அறநூல்கள் கூறுவவாயின. ஆனாற், பிசிராந்தையார் காலத்திருத்த அரசனோ அரசியன் முறையிற் சிறிதும் பிறழாதவனாய்த் தீநெறிச் செல்லாதவனாய் எப்போதுங் குடிமக்கட்கு நன்மையே செய்பவனா யிருந்தமையின்,அவனது செங்கோல் நீழற்கீழ் வைகி உயிர்வாழ்ந்த ஆசிரியர்க்கு எவ்வகைக் கவலையுந் துன்பமும் நோயும் இலவாயின. அதனால் அவர் ஆண்டில் முதியராயிருந்தே உருவில் இளைஞராய்க் காணப்படலாயினர்.

இனி, மேற்கூறிய புறக்காரணமேயன்றி, ஆசிரியர் பிசிராந்தையார் தாம் வாழ்ந்த நாட்டிற், கல்வி கேள்விகளும் நற்குணங்களும் ஒருங்கமைந்து உயர்ந்தோர்க்குப் பணிந்து ஐம்புல அவாக்கள் அடங்கப்பெற்ற சான்றோர்கள் பலர் உளராதலாகிய பிறிதொரு காரணமும் எடுத்துக் காட்டு கின்றார். இப்பெற்றியரான சான்றோர் குழுவிற் சேர்ந்து, பொய்யா நாவினரான அவர் கூறும் ஆழ்ந்தகன்ற மெய்யுரை களைக் கேட்டலானும், அவர்க்குள்ள இயற்கை நற்குணங் களொடு பழகுதலானும், அவரை அங்ஙனஞ் சேர்ந்தார்க்கு உயர்ந்த அறிவும் விழுமிய இயல்பும் அவாவின்மையும் ஒரு தலையாக உண்டாதல் திண்ணம். மேலும், அவர் கூறுவன வற்றின் சொற்சுவை பொருட் சுவைகளில் உள்ளம் ஊறிஇன்பத்திற் றிளைத்தலால் அவருடைய உயிரும் உடம்பும் இன்பவொளியால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/113&oldid=1579737" இலிருந்து மீள்விக்கப்பட்டது