பக்கம்:மறைமலையம் 10.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

113

என மொழியக், கார்க்கியன் “யான் உமக்கு மாணவனாக வருகின்றேன்” என வேண்டினான். அதுகேட்ட அசாதசத்துரு, 'மெய்யுணர்வு பெறுதற்பொருட்டு ஒரு ரு அரசனுக்கு மாணவனாதல் மாறான வழியாயிருக்கின்றது. ஆனாலும், நீ வேண்டிய மெய்யுணர்வினை நினக்கு யான் அறிவுறுத்து கின்றேன். வா!” என அவன் கையைப்பிடித் தெழுந்தான். (பிருகதாரணிய கோபநிடதம், இரண்டாம் இயல், முதற்பிராமணம்.)

என்னும் இப் பகுதியால், முழுமுதற்பொருளின் உண்மை நிலையினை, ஆரியப் பார்ப்பனர் முன்நாளில் அறியாதிருந் தமையும், அதனை அவர்க்குத் தமிழ் மன்னர்களே அந்நாளில் உணர்த்தினமையும், அங்ஙனம் அவருணர்த்திய மெய்யுணர்வு விளக்கமே ‘உபநிடதம்' எனப் பெயர் பெற்றமையுந் தெற்றென விளங்குதல் காண்க.

அற்றேல், ஒரோவொருகாற் றமிழ்வேந்தர்கள் ஆரியக் குருமார்க்கு மெய்யறிவு தேற்றியது உண்மையேயாயினும், ஆரியக்குருமார் எல்லாருமே மெய்யுணர் வில்லாதவரென்று அதுகொண்டு முடித்தல் பொருந்தாதாம் பிறவெனின்; அற்றன்று; பழமையிற் பிருகதாரணியகத்தோ டொத்த சாந்தோக்கிய உபநிடதத்திற் பார்ப்பனர் எவருமே மெய்யுணர்வுடைய ய ரல்லரென்பதூஉம், க்ஷத்திரியமன்னர்கள் மட்டுமே பண்டு தொட்டு மெய்யுணர்வுடையராய் விளங்கி அம்மெய்யுணர்வு வலியால் உலகமெல்லாந் தஞ் செங்கோலரசின் கீழ் வைத்து ஆட்சி செலுத்தி வந்தனரென்பதூஉம் ஐயுறவுக்குச் சிறிதும் L னின்றிச் தெளித்துரைக்கப்பட்டிருக்கின்றன. அவை வருமாறு:

“பாஞ்சாலர் அவைக்குச் ‘சுவேதகேது அருணேயன்’ வந்தான். அவனை நோக்கிப் 'பிரவாகனசைவலி' என்னும் அரசன் வினவினான், 'இளைஞனே, நின் றந்தை நினக்கு மெய்யறிவு புகட்டினரா?' அதற்குச் சுவேதகேது, 'புகட்டினர் ஐய,' என மறுமொழி புகன்றான். அதன்மேல் அரசன் 'உயிர்கள் இந்நிலவுலகவாழ்வை விட்டுச் செல்லுங்கால் எங்கே போகின்றன? அறிவையா?' என்று வினவினான். அதற்கவன் 'அறியேன், ஐய,' என்றான். அரசன்: 'அவை திரும்பப் பிறவிக்கு

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/138&oldid=1579763" இலிருந்து மீள்விக்கப்பட்டது