பக்கம்:மறைமலையம் 10.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

115

மிகப்பழைய இச் சாந்தோக்கிய வாய்மையுரையாற், சாகாக் கல்வியை அறிந்தவரும் அதனை அறிவிப்பவரும் பண்டை நாளில் அரசவகுப்பினருள் இருந்தனரேயன்றி, ஆரியப் பார்ப்பனருள் எவரும் இருந்திலரென்று முண்மை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெள்ளத்தெளிய விளங்குகின்ற தன்றோ?

L

உலகிய

அஃதொக்குமாயினும், க்ஷத்திரியரென்பார் தமிழஅரசரே யென்பது யாங்ஙனம் பெறுதும்? அவர் ஆரியருள்ளேயே ஒரு வகுப்பினராயிருத்தல் ஆகாதோ? எனின்; ஆகாது. ஆரியருட் லை சிறந்த வகுப்பினராயும், வேத மோதுதலும் வேள்வி வேட்டலுமாகிய தலையாய வினைகளைத் தாஞ் செய்வதோடு பிறரையுஞ் செய்விப்பாராய் ஆரிய வகுப்பின ரெல்லார்க்குங் குருக்கண்மாராயும் உள்ள பார்ப்பனர் வழி வழி மெய்யறி வாராய்ச்சிக் குரியராயின் அவரன்றோ அதனை முற்றவுணர்ந் தாராகல் வேண்டும்? அவரன்றோ தம்மிற் றாழ்ந்த தம்மாரிய இனத்தவரெல்லார்க்கும் அதனை யுணர்த்துவாராகல் வேண்டும்? மற்று, அவரிற் றாழ்ந்தவராகவும், எந்நேரமும் லொழுக்கங்களிலேயே நினைவுஞ்செயலும் இழுபட்டு, அவற்றைச் சீர் திருத்தி முறையாகப் புரிவதிலேயே கருத்தொருப் பட்டு நின்றவராகவும் உள்ள அரசர்கள் ஆரியராயின் அவர் மட்டுமே, அவ் வாரியப்பார்ப்பனர் அறியாத மறைபொருட் பெருங் கல்வியை யுணர்ந்திருந்தன ரென்றலும், அதனையவர்க்கு அறிவித்தனரென்றலும், என்னை? என்று உண்மையை யுள்ளவாறு ஆராய்ந்து உணர்வார்க்கு, மெய்ப்பெருங் கலையுணர்வு பெற்ற க்ஷத்திரியரென்பார் பண்டை நாளில் ஆரிய இனத்தைச் சேர்ந்தவரல்லராய், நாகரிகத்திற் பண்டே ஏனையெல்லாரினும் பார்க்க மிக்கோங்கித் திகழ்ந்த பழந்தமிழ் மக்களினத்தைச் சேர்ந்தவராய் நின்ற வாய்மை தெற்றென விளங்காநிற்கும்.

மேலும், பண்டை யாரியர் ஆடுமாடு மேய்த்துக்கொண்டு ஊர்ஊராய்த் திரிந்தவரேயல்லால், நாடு நகரங்கள் வகுத்து ஒருவனை அரசனாகவைத்து அவன்கீழ் அடங்கி முறையான நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்தவ ரல்லரென்பதூஉம் அந்நாளில் அவர் தாம் வணங்கிய சிறு தெய்வங்கண்மேற் பாடிய இருக்குவேதப் பழம்பதிகங்களால் நன்கறியக் கிடக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/140&oldid=1579765" இலிருந்து மீள்விக்கப்பட்டது