பக்கம்:மறைமலையம் 10.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் 10

பொருளுக்குத்தகச் சொல்லமையாமற் சொல்லுக்குத் தகப் பாருள் புகுத்துவதிலேயே கருத்தீடுபட்டு நின்றார். இப்பிற்காலப் புலவர் ஆக்கிய ‘அந்தாதிகள்’ ‘கலம்பகங்கள்' கோவைகள்’ ‘உலாக்கள்” “பிள்ளைத்தமிழ்கள்,’ ‘பரணிகள், டுகவிகள்,’ ‘சீட்டுக்கவிகள்,' போல்வனவெல்லாம் பெரும் பாலும் பொருள் சென்ற வழியே சொற்செல்லாமற், சொற் சென்றவழியே பொருள் செலுத்தப்பட்டு, பொருட்பயன் தருவனவல்லவாய்ப் பொலிவிழந்து காணப்படுகின்றன. நூல் பயில்வதெல்லாம் உணராத பொருளை உணர்ந்து அறிவு பெறுதற்கும், உணர்ந்த பொருளை மேலும் அழகுறக் கண்டு இன்புறுதற்குமேயாம். இவ்வாறு அரிய பொருளும் அழகிய பாருளும் நுவலப்படுங்கால் அவற்றின் இயல்புக்கிசைந்த சாற்கள், ஓர் இழையில் முழுமணிகள் கோக்கப்பட்டாற் போற், கவினுறப் போந்தமைய உருவானும் உள்ளுறை பொருளானும் அறிவும் இன்பமும் மேன்மேற் பெருகச் செய்வதே ஒரு விழுமிய நூலின் தன்மையாகும். மற்றுச், சொற்களைத் திரித்தும் புணர்த்தும் பலவாறு பிரிந்து பொருடர இயைத்தும் பெரிது அறிவுழன்று செய்த ஒரு நூலை அங்ஙனமே அறிவுழன்று பலநாட் பயின்றுங் கடைசியாக அப் பயிற்சியாற் பெற்ற பயன் யாதென்று அறியலுறுவார்க்கு, அதனாற் போந்த பொருட்பயன் ஏதுமே இல்லையென முடியுமாயின், அஃது “உமிக்குற்றிக் கை சலித்த” பான்மையாய் முடியுமன்றே? இதனை ஓர் எடுத்துக்காட்டான் விளக்குதும். துறைமங்கலஞ் சிவப்பிரகாச முனிவராற் செய்யப்பட்ட பழமலையந்தாதி” என்பது அந்தாதி நூல்களிற் சிறந்த தொன்றாக வைத்துப், பழையவழியே தமிழ்கற்கும் மாணவர்க்குத் தமிழாசிரியரான் முதன்முதற் கற்பிக்கப்பட்டு வருகின்றது. யாம் எமதிளமைக் காலத்தில் ஆசிரியரது கட்டளையால் முதன்முதற் பயின்றதும் இவ்வந்தாதியே யாகும். இதிற் போந்த செய்யுட்களில் ஒன்று வருமாறு :

66

'ஒழியாக் கவலையொழிவதென் றோசொல் லுழல்புலத்தின் வழியாக் கவலை யிடைப்படு மானின் மயங்கிநின்று பழியாக் கவலை மனமே பரந்து பரவிலைவேல்

விழியாக் கவலை மகளிறை தாழ்பழ வெற்பினையே.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/151&oldid=1579776" இலிருந்து மீள்விக்கப்பட்டது