பக்கம்:மறைமலையம் 10.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

133

மணஞ்செய்து கொடுத்தற்குரிய முயற்சிகளைச் செய்கின்றனர்; அதனால் நீ அவளை விரைந்து மணம்புரிதல் வேண்டும் என்னுங் குறிப்புப் பொருளும் அடங்கிநிற்றல் காண்க. இச் செய்யுள் நான்கடிகளால் அமைக்கப்பட்ட சிறிய வடிவினதா யிருந்தும் ஆழ்ந்த பொருள் பெரிதுடைத்தாய், நம் அகக் கண்ணெதிரே இயற்கைக் காட்சியினையும் மக்கள் நிலை யினையும் முறைபிறழாமல் இனிது விளங்கக் காட்டுதல் நினைவிற் பதிக்கற்பாற்று. ஒரு மலைமுகட்டிலே தேனடை யொன்று தொடுக்கப் பட்டிருத்தலும், அதனைத் தொடுத்து அதன் கட்டேனை நிரப்பிய தேனீக்கள் தமக்குணவு நிறைய இருத்தலால் மகிழ்ச்சிமிக்கு அவ் அடையினைச் சுற்றிச்சுற்றிப் பறத்தலும், அதுகண்ட அம் மலைவாணரான குன்றவர்கள் அவ் அடையிலுள்ள தேனை எடுத்துக் கொள்ளுதற்காக அம்மலைக் கண் வளர்ந்த மூங்கிலொன்றை வெட்டிக் கொணர்ந்து ஒரு கண்ணேணி இயற்றுதலுந், தன் தலைமகளின் அன்னை அவடன் வடிவ வேறுபாட்டை உற்றுநோக்கி அவள் காதல் வயப்பட்ட உள்ளமுடையளாயிருத்தலை உணர்ந்து ‘இQ c னி நீ அம்பலத்தான் மலையிற் போய் விளையாடாதே' எனத் தடை செய்ததனைத் தோழி அவடன் காதலனுக்கு அறிவித்தலும் ஃது எத்துணை உண்மையாக எத்துணை அழகாக நம் உளக்கண்ணெதிரே கொணர்ந்து காட்டுகின்றது!

இங்ஙனமே, இடைக்காலத் தாசிரியர்களில் முதற் றோன்றிய வர்களான இளங்கோடிவகளுங் கூலவாணிகன் சாத்தனாருந் தங்காலத்து நிகழ்ந்த கோவலன் கண்ணகி வரலாறுகளும், மணிமேகலை உதயகுமரன் வரலாறு களுமாகிய மெய்ந்நிகழ்ச்சிகளையே யமைத்துச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பெரும்பொருட் டொடர்நிலைகளை (காப்பியங்களை) இயற்றினார். வடநாட்டு ஆரியமொழியின் வழியே புனைந்துரைப் பொய்க்கதைகள் இத் தமிழ்நாட்டுட் புகுந்து தமிழ்மக்களின் மனநிலையைச் சிதைத்தற்கு முன்னெல்லாந், தமிழாசிரியர் மனநிலையைச் சிதைத்தற்கு முன்னெல்லாந், தமிழாசிரியர் அனைவரும் மெய்ந்நிகழ்ச்சி களைப் பாடுதலிலேயே கடைப்பிடியாய் நின்றனர். ஒரோ வொருகாற் றமிழ்ப்புலவர் சிலர் ஆரியர் கொணர்ந்த பொய் வழக்கினைப் பருகி அறிவு மயங்கி அப் பொய்யினை மெய்யாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/158&oldid=1579783" இலிருந்து மீள்விக்கப்பட்டது