பக்கம்:மறைமலையம் 10.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஆராய்ச்சி

157

முடையோனாய் அவ்வுண்மைப் பொருளைத் தனக்கு அறி வுறுத்துகவென்று அவ்வரசனைக் குறையிரப்ப, அவனும் அவற்கு அதனை விளங்கவுரைத்தும், பின்னும், “நினக்கு முன்னே, இவ்வரிய ஞானப்பொருள் பிராமணர் எவர்க்குஞ் சொல்லப் பட்டிலது; இந்த ஞானபோதனை இவ்வுலகமெங்கணும் எம்முடைய வகுப்பினர்க்கே உரித்தாயுள்ளன. பிறரதனை அறியார்” என்று கூறினானென்பதும் 3உபநிடதங்களிற் பொருள்பெறக் கிளந்தோதப்பட்டமை காண்க. இவற்றாற், பிராமணரின் வேறாகப் பிரித்துரைக்கப்பட்ட அரசவகுப்பினர் ஆரியரல்லாமையும், பிராமணர் இயற்றிய வேட்டல் நெறிகள் அவரால் ஏற்றுக் கொள்ளப்படாமல் மறுக்கப்பட்டமையும், பிராமணர் அறியாத மெய்ப்பொருளாராய்ச்சி அவ்வரச வகுப்பினர்க்கே ஓர் உரிமைப் பொருளாயிருந்தமையும், அந்நுண்பொருள் வழக்கு நேர்ந்துழியெல்லாம் பிராமணர் மருண்டு அவரால் தெளிவுறுத்தப்பட்டமையும் நன்குபெறக் கிடந்தன.

ஆரியர் தமிழரைப் பகைத்தமை

இன்னும் இருக்குவேதந் தொகுத்துப் பாகுபடுத்தப்பட் காலத்தே ஆரியக் குருக்கண்மார்க்குந் தமிழக் குருக்கண் மார்க்கும் மாறுபாடு பெரிதாயிற்றென்பது, இருக்கு வேதத் தின் மூன்றாவது மண்டிலத்தை இயற்றிய விசுவாமித்திர ன் ரென்னும் அரசவகுப்பினர்க்கும். அதன் ஏழாம் மண்டிலத்தை இயற்றிய வசிட்டரென்னும் ஆரியவகுப்பினர்க்கும் இடை நிகழ்ந்த பொறாமையே சான்றாமென்பது. இவ்வாறே ஆரியவகுப்பினரிற் சேர்ந்த சமதக்கினி என்னும் இருடிக்குப் புதல்வராய்ப் பிறந்த பரசிராமர் திராவிட வகுப்பிற்குரியரான அரசரையெல்லாம் வேரொடு அழிக்க வேண்டுமென்னும் வஞ்சம் முதிர்ந்து திர்ந்ததூஉங் காண்க. தசரதன் என்னும் வேந்தனும் அவனருமைப் புதல்வர்களான சீராமன் முதலியோருந் திராவிட தேயத்துத் திராவிட அரசர்களே என்பது கொழும்பிற் புகழோங்கிய அறிஞரான வி.ஜே. தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய ““இராமரும் குரங்கு வீரர்களும்' என்னும் ஆராய்ச்சி யுரையானும் நன்கு துணியப்படும். இஃதென்னை? வடநாட்டிற் பிறந்து வடமொழியே வழங்கி வடநூல்களே எழுதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/182&oldid=1579807" இலிருந்து மீள்விக்கப்பட்டது