பக்கம்:மறைமலையம் 10.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் 10

மேலுந், திருவள்ளுவர் திருமயிலையில் ஓர் இருப்பை மரத்தின் கீழ்க்கண்ணதான குடிலொன்றிற் றோன்றினாரென வழங்குந் தொன்றுதொட்ட வழக்கிற் கேற்பவே, இன்றும் அவ்விருப்பை மரமும், அவர் தோன்றிய குடிலின் அடை யாளமாக அம்மரத்தின் அருகே அவரது திருவுருவம் நிறுத்திய திருக்கோயிலொன்றுந் திருமயிலையிலிருக்கின்றன; அதுபோலத், திருவாலவாயிலா தல் வேறெந்தவூரிலாதல் அவை யிரண்டும் இருத்தல் அறியப்படாமையிற் றிருமயிலையே அவர் பிறந் தருளிய இடமாகுமெனக் கபிலரகவல் நுவலும் வரலாறே உண்மை வரலாறாகு மென்று கடைப்பிடிக்க.

இனித், திருமயிலையில் ஒரு துளுவ வேளாளர்பால் விடப்பட்டு அவரால் வளர்க்கப்பட்டு வந்த மகவைக் கண்டு, அவ்வேளாண் டலைவரின் உறவினர் "யாரோ இழிகுலத் தார் காமத்தாற் பெற்றுப் போகட்ட அகதிப் பிள்ளையை இவர் வளர்க்கின்றார்! ஈதென்னை!” என்று பழி கூறாநிற்ப, அதற்கு மிக வருந்திய அச்செல்வர் அம் மகவைப் பிரிதற் காற்றாராய்த் தம் விளை புலத்தில் உழுதொழில் செய்யும் பறைக் குடிகளுக்குக் குருவாய் உள்ள ரு வள்ளுவனை அழைத்து, அவன் கையில்அதனை ஈந்து “இதனைப்போற்றி வளர்ப்பாயாக!” எனக் கூறி, அவற்கு அதன் பொருட்டு ஆம் செலவுகட்கும் வேண்டும் பொருள் நல்கினார். அதுமுதல் அக்குழவி அவ்வள்ளுவன்பால் வளர்வதாயிற்று. அங்ஙனம் வள்ளுவனாற் போற்றி வளர்க்கப் பட்டமை பற்றியே நம் ஆசிரியர்க்குந் திருவள்ளுவரெனும் பெயர் வழங்குவ தாயிற்று, ஆகவே, ஆசிரியர்க்கு அது சாதிபற்றி வந்த பெயரே யாதல் திண்ணம். இஃது ஆசிரியரோடு ஒரு காலத்தினரான மாமூலனார்,

66

“அறம்பொரு ளின்பம் வீடென்னும் அந்நான்கின் திறத்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்

வள்ளுவன் என்பானோர் பேதைஅவன் வாய்ச்சொற் கொள்ளார் அறிவுடை யார்”

என்று தாமருளிய செய்யுளால், ஆன்ற புலமையிற் சிறந்து தெய்வத் தன்மையுடையராய் விளங்கும் பெருமானைச் சாதிபற்றி ‘வள்ளுவன்” என இழித்துக் கூறுவோன் எவனேனும் உளனாயின் அவன் அறிவில்லா மடவோனே யாவனென வலியுறுத்திச் சொல்லியவாற்றால் நன்கு விளங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/283&oldid=1579908" இலிருந்து மீள்விக்கப்பட்டது