பக்கம்:மறைமலையம் 10.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் - 10

உணர்ந்திருந்துந், தங் கணவர் சோறு சுடுகின்றது எனக் கூவியதனைக் கேட்டதும், அவ்வுணர்ச்சியினை மறந்து, நாயனாரது சொல்லின் வழியராய், அரைவாசியில் இழுத்த குடத்தையுங் கயிற்றையுங்கூட உடன்மறந்து ஓடிவந்து விசிறிகொண்டு வீசியதும், நாயனாரது சொற் பழுதாகாமல் அப் பழஞ்சோற்றிலிருந்து ஆவி குமுகுமுவென்று மேலெழுந்ததுந்,

திரும்பிக் கிணற்றண்டை அம்மையார் செல்லும்வரையில் அவர் அரைவாசியில் விட்டபடியே தண்ணீர்க்குடமுங் கயிறும் இடைவெளியில் நின்றதும் எல்லாம் பெரியதோர் இறும் பூதினை விளைவித்து, அம்மையாரின் காதலன்பின் பெருமை யினையும் அதன் வழித்தான அவர்தந் தெய்வக் கற்பின் மாட்சி யினையும் அவர்க்கு நன்கு புலப்படுத்தின.

பின்னர் ஒருகாற், பகற்பொழுதில் தமது நெசவு தறியின்கண்ணே ஆடை நெய்துகொண் டிருக்கையிற்றமது கையிலிருந்த நூனாழி கீழே வழுவிவிழ, உடனே அவர் அதனை யெடுத்தற்கு விளக்கேற்றி வரும்படி தம் மனைவியரை அழைத்தனர். அழைத்த வண்ணமே அம்மையார் விரைந்து விளக்கேற்றி வந்து அதனை ஏந்தினர். பகற்காலத்திற் கீழ் விழுந்ததனை எடுத்தற்கு விளக்கு ஏதுக்கென வினவாமல், நாயனார் விரும்பியபடியே விரைந்து விளக்கேற்றிக் கொணர்ந்த அம்மையாரின் மனவொருமையினைக் கண்டு அவ்விருந்தினர் மிகவும் வியப்பெய்தினர்.

இங்ஙனமாகக் கணவன் ஏவியவைகளை ஏவியவாறே மறாது மனவொருமையுடன் செய்யுங் காதன் மனையாள் வாய்ப்பின் அவளுடன் கூடியிருந்து ஐம்புலவின்பங்களை ஆரத்துய்த்து, மறுமை யின்பத்தைப் பெறுதற்காவனவும் இடரின்றிச் செய்தற்கேற்ற இல்லறத்தை நடாத்துதலே விழுமிதென்றும், அங்ஙனங் காதற்கற்புடைய ய மனையாள் வாயாவிடின் இம்மையின்பங்களை வெறுத்து மறுமை யின்பத்தையே நாடித் தவவொழுக்கத்தில் துளங்காது நிற்குந் துறவறத்தை மேற்கொள்ளுதலே வேண்டற்பாலதென்றுந் தெளியவுணர்ந்து அவ்விருந்தினர் நாயனாரை வணங்கி விடைபெற்று ஏகினரென்ப.

இன்னும், பாப்பம்மையார் தங் காதற் கணவராகிய நாயனார் கற்பித்தவைகளைக் காரணங் கேளாமலே செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/299&oldid=1579924" இலிருந்து மீள்விக்கப்பட்டது