பக்கம்:மறைமலையம் 10.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் - 10

இல்லொழுக்கத்தில் விரைந்து செய்யவேண்டும் நிகழ்ச்சி களே மிகப்பல. அமைதியாகக் காலந்தாழ்த்துச் செய்ய வேண்டுவன மிகச்சில. இன்னும், இல்லத்தின் உள்ளே செய்யவேண்டுஞ் செயல்களினும், வெளியே சென்று செய்ய வேண்டுவன மிகவிரைந்து நடைபெற வேண்டுவனவா யிருக்கும். இல்லத்தினுள்ளிருந்து வேண்டுவன செய்வார் பெண் மக்களும், அதன் வெளியே சென்று வேண்டுவன செய்வார். ஆண்மக்களுமாய் இருக்கின்றனர். வெளியே சென்று பொருள் ஈட்டும் ஆடவர், அப்பொருள் ஈட்டும் முயற்சியில் தம்மோடு இணங்கியும் அதற்கு மாறுபட்டும் நடப்பார் பலருடன் தொடர்புற்று நின்று அதனை மிக விழிப்பாய்க் கூர்த்த அறிவோடு நடத்தவேண்டி யிருத்தலின், அவர் தாம் விரும்பிய படியெல்லாம் அதனைக் காலந்தாழ்த்துப் பாராமுகமாய்ச் செய்தல் இயலாது; அதிற்றம்மொடு தொடர்புடையார் செய்யிம் முயற்சிக்குத்தக அவரோடு இணங்கியோ இணங் காமலோ தாம் அதனை விரைந்து அறிவாய்ச் செய்து முடிக்கவேண்டி வரும். இதனை ஒரு நிகழ்ச்சியில் வைத்து விளக்குவாம். பழங்கள் மொத்தமாய் வாங்கி விற்பனை செய்யும் ஒரு வணிகர், குடகு நாரத்தம்பழம் வருவித்து விற்பனை செய்யும் மற்றொருவர்பால் தமக்கு ஐம்பது வெள்ளிக்காசுக்கு அப்பழங்கள் வேண்டுமெனவும், அவை வந்திறங்கியவுடன் தமக்குத் தெரிவிக்க வேண்டுமெனவும் அறிவித்திருந்தார். அங்ஙனமே வேறு வணிகர் சிலரும் அப்பழங்கள் விலைகொளல்வேண்டி அவை வரும் நேரத்தைத் தமக்குத் தெரிவிக்கும்படி அறிவித்திருந்தார்கள். பின்னர் ஒரு நாட்காலையிற் றிடுமெனக் குடகுநாரத்தம் பழங்கள் கூடைகூடையாய் வந்திறங்கின. வருவித்தவர் உடனே தம் ஏவலாட்களை வணிகர் பலரிடமும் போக்கி அதனை அவர்க்கு அறிவித்தனர். முதலிற்கூறிய வணிகர் விழிப்பும் அறிவுஞ் சுருசுருப்பும் உடையர்; அவர் மனைவியாரும் அவரோடு ஒத்து அவர் வேண்டுவனவெல்லாங் காரணங்கேளாமல் உடனே செய்யும் இயல்பினர். ஆகவே, அவர் காலை ஏழுமணிக் கெல்லாந் தாம் வெளியே செல்லல் வேண்டுமெனவுஞ் செல்லுங்கால் தாம் ஐம்பது வெண்பொற் காசு கொண்டு செல்லல் வேண்டுமெனவுந் தம் மனைவியார்க்கு ஆறு மணிக்கே தெரிவித்திருந்தார். உடனே அவ்வம்மையார் தங் கணவர்க்கான காலையுணவு செய்துகொடுத்துத், தமது முதற்பொருளிலிருந்து ஐம்பது

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/301&oldid=1579927" இலிருந்து மீள்விக்கப்பட்டது