பக்கம்:மறைமலையம் 11.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

எழில்மிகு செவ்வியள் மாதோ, கழிபெருங் காதல் பயந்த ஏதமுறு நோயுஞ் சுடுகதிர்க் கனலி அடும்பெரு வருத்தமும் ஒன்றென மொழிவ ராயினும் என்றூழ்

67

-

பொழிகதிர் வருத்த மீதுபோல்

மழவிள மகளிர்க்கு அழகுபயந் தின்றே.

-

(12)

(இ-ள்) நறுமண நரந்தம் - நல்ல மணத்தை உடைய நரந்தம் கொங்கை புல்லின் அரைப்பை, நகிலம் மேல் திமிர்ந்தும் களின்மேற் பூசியும், தாமரை நாளம் தாமரைத் தண்டை காமரு கையில் - அழகிய அல்லது விரும்பத்தக்க கைகளில், காமர் என்பதன் ஈற்றில் உகரச் சாரியை வந்தது, பவளக் கடகம் எனத் துவள வளைத்தும், என் ஆர் உயிர்க் காதலி ஓர் அயர்வு உறினும் எனது அரிய உயிரை அனையளான காதலி ஒரு தனித்தளர் னை அடைந்தாலும், எழில்மிகு செவ்வியள் - அத்தளர்விலும் ஒர் அழகு மிகுகின்ற பதத்தினையுடையள், ‘மாது' 'ஓ': அசை, கழிபெருங்காதல் பயந்த - மிகப்பெரிய காதலன்பு தந்த, ஏதம் றுநோயும், - துன்பத்தினையுடைய நோயும், சுடுகதிர்க் கனலி அடும் பெரு வருத்தமும் - தீய்க்கும் கதிர்களைச் சொரியும் பகலவன் வருத்தும் பெருந் துன்பமும், ஒன்று என மொழி வராயினும் ஒரு தன்மையவே எனக் கூறுவாருளாராயினும். என்றூழ் பொழி கதிர்வருத்தம் - பகலவன் சொரியுங் கதிர்களால் உண்டாந் துன்பம், இதுபோல் இங்க காதல் விளைத்த நோயைப்போல், மழ இள மகளிர்க்கு மிக இளையமாதர்க்கு, அழகு பயந்தது இன்று அழகு தந்ததில்லை; ஏ: அசை; ‘பயந்தது இன்று' என்னுஞ் சொற்கள் ‘பயந்தின்று' என மருவின.

-

-

வண்மலர்க் கன்னமும் வறண்டு வற்றின

-

திண்ணிய கொங்கையுந் திறந்தி ரிந்தன

நுண்ணிய நடுவுமேல் நுணுகிப் போயின வண்ணமும் வெளிறின தோளும் வாடின.

(13)

ரு

(இ-ள்) வள் மலர்க் கன்னமும் வறண்டு வற்றின கொழுமையான மலர்களை யொத்த சகுந்தலையின் இரு கன்னங்களும் நீர்ப்பசையற்றுச் சுருங்கின, திண்ணிய கொங்கையும் திரிந்தன - இறுகிய கொங்கைகளுந் தமது இறுக்கம் மாறிவிட்டன, நுண்ணிய நடுவும் மேல் நுணுகிப்போயின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/100&oldid=1580057" இலிருந்து மீள்விக்கப்பட்டது