பக்கம்:மறைமலையம் 11.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

111

வாற்றியபோது தாம் எடுத்த பொருளைக் கடந்து முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை அளவு கடந்து இழித்துரைக்க, அதனைக் கேட்டு மனம் பொறாமல், இப் பெரியவர் அப்போது தமிழ் நாட்டின்கட் சைவசித்தாந்த சண்டமாருதமாய் நிகரற்று உலாவிய சிவஞானச் செல்வரும் சித்தாந்த ஆசிரியருமான திருப்பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்களைச் சென்னை யிலிருந்து வரவழைத்து, அவர்களாற் சைவசமய உண்மைகளை எவரும் அறிந்து களிக்கும்படி செய்தனர். அவ்வளவோடு நில்லாமல், நாகையிற் சிவஞானியாய் விளங்கிய திரு. வீரப்ப செட்டியார் முதலான சிவநேயர்களின் துணையைப் பெற்று வெளிப்பாளையத்தின்கண் இவர் ஒரு சைவசித்தாந்த சபையை நிலைபெறுத்தினர்.

அந்நாளில் நாகையிற் பிறந்து சிறு பருவத்தினராய் ஆங்கில கலாசாலையில் கல்வி பயின்று கொண்டிருந்த தவத்திரு மறைமலையடிகளார் அவர்கள் தமிழும் கற்கும் விருப்பம் மிக உடையவராய், அப்போது நாகையிற் புத்தக வாணிகம் செய்து கொண்டிருந்த இயற்றமிழாசிரியர் திரு. வெ. நாராயணசாமிப் பிள்ளையவர்கள் திருவடியை அடுத்து அவர்கள்பால் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை வரன் முறையாகக் கற்று வந்தனர். மிகச் சிறிய பருவத்தே ஆங்கில மொழியோடு தமிழையும் செவ்வையாகக் கற்றுவந்த அடிகளிடத்தே இப்பெரியவருக்கு மிகுந்த அன்பு உண்டாயிற்று. மேற்குறித்த இயற்றமிழ் ஆசிரியர் முன்னிலையில் இவர்கள் இருவர்க்கும் உண்டான நட்பு நாளுக்குநாள்

ப்

வளர்ந்து வரலாயிற்று. ஆசிரியராலும் இப்பெரியவர் நட்பினாலும் மறைமலையடிகள் அவர்கள் மிகவும் திருத்தமாக வளர்ந்து புலமை நிரம்பினார்கள். பிறகு இப் பெரியவர் முயற்சியினாலே அடிகள் திருப்பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்களைச் சித்தாந்த ஆசிரியராகக் கொண்டனர். இப் பெரியவர் சைவசித்தாந்த உண்மைகளைப் பல நூல் மேற்கோள்களோடு கல்லுங்கரையச் சொற்பொழிவாற்ற வல்லவராய் இருந்ததோடு அடிகளையும் அடிக்கடி நாகை வெளிப்பாளையம், திருச்சிராப்பள்ளி முதலான இடங்களுக்கு வருவித்து அவர்களால் சொற்பொழிவு செய்வித்தார்கள். நாகையிற் சைவசித்தாந்த மகாசமாசம் கூடியபோது இவர்கள் செய்த உதவி மிகப் பெரிது. இப் பெரியார் சார்வதாரி ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/144&oldid=1580101" இலிருந்து மீள்விக்கப்பட்டது