பக்கம்:மறைமலையம் 11.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

11

மறைமலையம் – 11

ளங்கினார். அச்சோமசுந்தரரை மதுரை நாயகம் நாகைக்கு அழைத்துச் சிவனியப் பழியைத் துடைத்துக் கொள்ள விரும்பினார். அவ்வாறு மறுப்புக்காக அழைக்கப்பட்ட சோமசுந்தரர் மறுபடி மறுபடி நாகைக்கு வந்து பொழிந்து சிவப்பயிரை வளர்ப்பாரானார். இது மறைமலையார்க்குக் காலத்தால் வாய்ந்த மழையெனக் கவின் செய்தது. இலக்கிய இலக்கணத் தேர்ச்சி மிக்க அடிகளைச் சிவனியப் பெருந் தேர்ச்சியராகச் செய்தது இப் பொழிவாகும். அன்றியும் அவரை எழுத்துத் துறையில் புகுவித்த பேறும் அதற்கு உண்டு.

முருகவேள் :

சோமசுந்தர நாயகர் செய்த பொழிவைப் பசித்தவர்க்கு வாய்த்த பல்சுவையுணவென்ன, மறைமலையார் தவறாமல் கேட்டு வந்தார். அதனாற் சிவநெறிச் சீர்மை அவருள்ளத்தில் ஆழப் பதிந்தது. இந் நிலையில் நாயகர் கூறிய ஒரு கருத்தை மறுத்து அந்நாளில் வெளிவந்த ‘சச்சனப் பத்திரிகா' என்னும் கிழமைத் தாளில் ஒருவர் கட்டுரை வரைந்தார். அதனைப் படித்த மறைமலையார் மறுப்புக் கட்டுரையாளர் கொண்ட மயக்கவு ணர்வையும் அவர் மறுப்புக் கட்டுரையில் அமைந்த வழுக்களையும், நாயகர் கருத்தின் நயத்தையும் உரைத்து ‘நாகை நீலலோசனி’ என்னும் இதழில் 'முருகவேள்' என்னும் புனைபெயரில் மறுப்புக்கு மறுப்பு வெளியிட்டார்.

நீலலோசனிக் கட்டுரையை நாயகர் படித்தார்; கட்டுரையின் நடையும் ஓட்டமும் கருத்துமாட்சியும் அவரை வயப்படுத்தின. அவர் வியப்புற்று அக் கட்டுரையாளரை அறிய அவாவினார். தம் கருத்தை மறுக்கத் துணிந்தாரைத் தாம் அறியாமலே மறுத்து நிலைநாட்டியவர் ஒருவர் உள்ளார் என்றால் அவரை அறிய அவாவுண்டாதல் இயற்கைதானே அதனால், மதுரை நாயகத்திற்கு நாயகர் எழுதினார். அதற்கு விளக்கம் வரைந்தார் நாயகம். அதனால் வேதாசலம் (மறைமலை) என்னும் வளர்பயிரின் பெயர் நாயக முகிலின் நெஞ்சில் பதிவதாயிற்று! பதிவுற்ற சூழல் இது.

மீண்டும் ஒருகால் நாகைப்பொழிவுக்கு வந்த நாயகர் மறைமலையைக் காண விரும்பினார். மதுரை மறைமலையை நாயகர்க்கு அறிமுகப்படுத்தினார்!

நாயகர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/189&oldid=1580146" இலிருந்து மீள்விக்கப்பட்டது