பக்கம்:மறைமலையம் 11.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் – 11

மறைந்த பதினாறாம் நாள் ‘நீத்தார் கடன்’ நிகழ்ந்தது. அவர்தம் இல்லில் அறிஞர் பெருமக்கள் ஆற்றொணாத் துயரால் கூடிய அவையில் ‘காஞ்சி' பாடப்பட்டது. அடிகள் வாய் சொன்மழை பொழிய, கண், கண்மழை பொழிந்தது; அவையும் கண்மழை பொழிய அவலப் பெருக்காயது' சார்ந்ததன் வண்ணமாதல் என்னும் சிவனியக் கொள்கை சீருற விளக்கமாகிய நிகழ்ச்சியாயிற்று அது.

காஞ்சி நூல் வடிவம் பெறவேண்டும் என அன்பரும் ஆர்வலரும் அவாவினர், நூலும் ஆயிற்று. “பழம் புலவர் பாவன்ன செறிவும் செப்பமும் இயற்கை நவிற்சியும் அமைந்தது காஞ்சி” எனப் பெரும் பெரும் புலவர்களும் பாராட்டினர். எனினும், புலமைக் காய்ச்சல் என்பது ஒன்று உண்டே! நல்லன விடுத்து அல்லனவே தேடி அதையே முன்வைத்து அலைக் கழிப்பார் என்றுதான் இலர்? அதனால் சோமசுந்தரக் காஞ்சியில் சொல்வழு, பொருள்வழு, இலக்கண வழு இன்ன இன்ன எனக் கூறுவார் கிளர்ந்தனர். அவற்றுக்கு அஞ்சி ஒடுங்குவரோ அடிகள்! 'முருகவேள்' பெயரால் இளந்தையிலேயே பெரும்புலவர்கள் கருத்துகளைப் பிழை யென்றால் பிழையென்று வீறிநின்ற ‘நக்கீரர்’ அல்லரோ அவர். அதனால் அழுக்காற்றால் சுட்டிக் காட்டிய புலவர் கூற்றுகளை யெல்லாம், சூறையில் சுழலும் சருகெனச் சுழற்றி எறிந்து ‘சோமசுந்தரக் காஞ்சியாக்கம்’ என்னும் பெரியதொரு நூலை வரைந்தார். எதிர்ப்பு அமைந்தது; அடங்கியது; அப்பொழுது அடிகளார் அகவை 26; ஆண்டு 1902 ஆகும்.

அறிவுக் கடல் :

அதே 1902 இல் ‘ஞானசாகரம்' என்னும் மாதிகையை அடிகளார் தொடங்கினார். அடிகளார் தனித்தமிழ் உணர்வு காண்ட பின்னர் அது ‘அறிவுக்கடல்' ஆயிற்று.

L

பயர் ஞானசாகரம் என வைக்கப்பட்டாலும், அப்பொழுதே அடிகளார் தமிழ் வடமொழி வேறுபாட்டை அறிந்தே இருந்தார் என்பதை அதன் முதல் இதழே வெளிப்படுத்துகிறது. “தமிழ் வடமொழியினின்றும் பிறந்ததா?” என்பதொரு கட்டுரையும், “தமிழ் மிகப் பழையதொரு மொழி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/201&oldid=1580158" இலிருந்து மீள்விக்கப்பட்டது