பக்கம்:மறைமலையம் 11.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மலை

193

ஈழத்திற்கு அழைக்க ஆழத்தில் ஆழமாக மூழ்கினார். அவ்வாறே அவர் அழைப்பை ஏற்று 7-1-1914 -இல் கொழும்புத் துறையை அடைந்தார் அடிகளார். 'தம்மை ஈழத்திற்கு இவ்விளைஞர் தாமே அழைத்தார்' என வியப்புற்றார் அடிகளார். பின்னர் அவரிடத்து ஈழத்துச் செல்வர்கள் கொண்டுள்ள ஈடுபாட்டை உணர்ந்து” இவ்விளைஞர்பால் இங்குறையும் பொருட் செல்வர்களும் அருட்செல்வர்களும் கொண்டுள்ள ஈடுபாடு தான் என்னே! என்னே! எனக்குத் தொண்டு செய்ய என்றே இறைவன் இத்திருவரங்கரை அருளினன் போலும்” எனப் பெருமித முற்றார். 11-1-1914 இல் கொழும்பு தம்பையா சத்திரத்தில் முதற்கூட்டம் நடந்தது. திருஞானசம்பந்தரைப் பற்றி அடிகள் பேசினார். 24-3- 1914 வரை அடிகள் கொழும்பிலே தங்கினார்; பன்னிரு கூட்டங்களில் பொழிவு செய்தார். இச் சுற்றுலாவிலே உருபா 1883 கிடைத்தது. திங்கள் தோறும் ஒரு தொகை உதவும் வள்ளன்மையர் சிலர் வாய்த்தனர்; அடிகளார் இயற்றிய நூல்களைத் தருவித்து விற்கவும் ஏற்பாடாயிற்று அடிகளார் அச்சுக்கூடம் ஒன்று நிறுவுவதற்குத் துணிந்தார். அதற்கும் திருவரங்கர் பேருதவி புரிந்தார். அதனால் ஞானசாகரத்தில்,

“நமது அச்சுக்கூடத்திற்காக அன்பர்களிடம் பொருள் திரட்டித் தர முன்வந்து நின்று, சென்ற ஒன்றரையாண்டுகளாக இடையறாது உழைத்து உதவி செய்து வரும்நம் அன்புருவான் ஸ்ரீமான் வ. திருவரங்கம் பிள்ளையவர்களின் பேருபகாரச் செய்கைக்குத் திருவள்ளுவ நாயனார்,

“செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது”

6

என்றருளிச் செய்த வண்ணம் எவ்வகையான கைம்மாறு நான் செய்யக் கூடும்?” என்றும்,

ஸ்ரீமான் திருவரங்கம் பிள்ளையின் வேண்டுகோட் கிணங்கிப் புண்ணியத் திருவாளரான குலசேகரன் பட்டினம் ஸ்ரீமான் ரா.ப. செந்திலாறுமுகம் பிள்ளையவர்கள் எழுநூற்றைம்பது ரூபாவும், தயாளகுணப் பிரபுவான கு.ப. பெரியநாயகம் பிள்ளையவர்கள் ஐந்நூறு ரூபாவும் நமது அச்சுக்கூடத்திற்கென்று தருமமாக உதவி, உடனே உயர்ந்த புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/226&oldid=1580183" இலிருந்து மீள்விக்கப்பட்டது