பக்கம்:மறைமலையம் 11.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の

தமிழ் மலை

197

களஞ்சியம் நடையிடும்! என் செய்வது; அரங்கர் ஆயிரவரிடம் உறுப்புதவி பெற்றிருந்தார்! அவர்க்கெல்லாம் என்ன சொல்வது? அடிகளார் எடுத்துக் கொண்ட உரைப்பணி அரும்பணி! புனைகதை போல்வதன்று! கருத்துக் கட்டுரையும் அன்று! ‘உரைகாண்டலும் ஆகாது' என ஓதப்பட்ட நூலுக்கு, உரைவரைய ஏற்றுக் கொண்டவர் அடிகளார்! அவர்க்கு நிறைவு தராவகையில் காலமும் இதழும் கருதி எழுதி முடிக்க இயலவில்லை! இதழ்த் தடை சிறிது சிறிதாய் உறவுத் தடையாயிற்று! அடிகள் அரங்கரைப் பொறுத்த அளவில் வணிகத்தடையும் அன்புத் தடையுமாக அமையும்! ஆனால், 'அரங்கர் அம்பிகையார்க்கோ' அது காதல் தடையும் ஆயிற்று! கடிகையாரத்தின் ஒரு சக்கரச் சிக்கல் பிறபிற சக்கரங்களையும் சுழலாது செய்து ஓட்டத்தைத் தடுத்து நிறுத்துவது போல் ஆயிற்று! இருபாலும் நிகழக் கூடாத ஒரு பிரிவு உண்டாயிற்று.

யாழ்ப்பாணத் தமிழர் மீண்டும் அடிகளார் பொழிவைக் கேட்க விரும்பினர். அழைப்பு விடுத்தனர்; அடிகளார் 21-12-1921 இல் கொழும்பு சேர்ந்தார். இச் செலவில் அடிகளார், பண்டித மயில் வாகனனார் என்னும் விபுலானந்த அடிகளார் விருந்தினராகத் தங்கினார்.16-1-1922 வரை பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றிப் பெருஞ் சிறப்புடன் மீண்டார். நீலாம்பிகையார் :

நீலாம்பிகையார் உள்ளம் வீட்டில் நிலைகொள்ளவில்லை. மேலே படிக்க விரும்பினார்.1920 இல் வில்லிங்டன் பெருமாட்டி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் முதற்படிவத்தில் சேர்ந்தார். அக் கல்லூரியொடு சார்ந்த விடுதியிலேயே உறைந்தார். நான்காம் படிவம் பயிலும்போது அவர்க்கு இளைப்பு இருமல் வருத்தியது. சின்னாள் விடுப்பும், பன்னாள் விடுப்புமாய் முற்றாகப் பள்ளியை விடுக்கும் நிலையையும் இருமல் ஆக்கிற்று. ஆங்கில மருத்துவம் சித்தமருத்துவம் எல்லாம் செய்தாயின. உடல் நோய்த் தீர்வு, உளநோய்த் தீர்வு ஆகாமல் தீராது போலும்!

இந்நிலையில் பல்லவபுரத்தில் ‘வித்தியோதயா' என்றொரு கல்லூரி தொடங்கிற்று. அக்கல்லூரியின் தமிழாசிரியர் வேலை அம்பிகையைத் தேடி வந்தது. அம்பிகையார் தம் பத்தொன்பதாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/230&oldid=1580187" இலிருந்து மீள்விக்கப்பட்டது